மேலும் அறிய

கர்நாடக அரசியலில் புது ட்விஸ்ட்! முதலமைச்சர் பதவிக்கு போட்டா போட்டி.. காங்கிரஸ் திட்டம் என்ன?

ஊழல் வழக்கில் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்யும் பட்சத்தில் முதலமைச்சர் பதவி தனக்கே வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் சிலர் காய் நகர்த்தி வருகின்றனர்.

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கர்நாடக முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையாவுக்கு எதிரான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் பதவியை குறிவைத்து கர்நாடக காங்கிரஸில் உட்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கர்நாடகாவில் முதலமைச்சர் மாற்றப்படுகிறாரா?

முதலமைச்சர் பதவியில் சித்தராமையாவே தொடர்ந்து நீடிப்பார் என கர்நாடக காங்கிரஸ் தலைவர்களும்  அமைச்சர்களும் கூறி வருகின்றனர். இருப்பினும், ஊழல் வழக்கில் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்யும் பட்சத்தில் முதலமைச்சர் பதவி தனக்கே வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் சிலர் காய் நகர்த்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எம்.பி. பாட்டீல், சிவானந்த் பாட்டீல் ஆகியோர் வெளிப்படையாகவே மோதி வருகின்றனர். இதுகுறித்து சிவானந்த் பாட்டீல் கூறுகையில், "கட்சிக்காக உழைத்தவர்கள் ஏராளம்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் (டிகே சிவக்குமார்) கடுமையாக உழைத்து கட்சியை கட்டி எழுப்பினார். அவர் முதலமைச்சர் ஆக விரும்பினார். ஆனால், இறுதியில் வேறு ஒருவர் முதல்வர் ஆனார். மற்றவர்களுக்கும் ஜூனியர்களுக்கும் முதல்வர் ஆகும் வாய்ப்பு தரப்பட வேண்டும்.

போட்டா போட்டி போடும் தலைவர்கள்:

சித்தராமையாவும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்ததை எம்.பி. பாட்டீல் மறந்துவிட்டார். இதை நான் அவருக்கு நினைவூட்ட மாட்டேன். கட்சியில் அவருக்கு (எம்.பி. பாட்டீல்) சீனியர்கள் பலர் உள்ளனர். கட்சியில் மூத்தவர்கள் இல்லையா? அவர் காத்திருக்க வேண்டும். மூத்தவர்கள் இருக்கும்போது நீங்கள் காத்திருக்கக் கூடாதா? என்றார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய எம்.பி. பாட்டீல், "கட்சி முடிவு செய்து உங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் (முதல்வர் பதவிக்கு), சீனியர், ஜூனியர் என்ற கேள்விக்கே இடமில்லை. இன்றைய நிலவரப்படி, (முதல்வர் பதவி) காலியாக இல்லை.

ஆனால், ஒரு நாள், இயல்பாக, எனக்கு அந்த பதவி கிடைக்கும். அதில், எனக்கு நம்பிக்கை உள்ளது. ஜேடிஎஸ்/பாஜகவில் இருந்து வந்துள்ளதால், சிவானந்த் பாட்டீலுக்கு வாய்ப்பு வெகு தொலைவில் உள்ளது" என்றார்.

எம்.பி. பாட்டீல், சிவானந்த் பாட்டீலை தவிர கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலியும் முதலமைச்சராக முயற்சி செய்து வருகின்றனர்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46.. தமிழ்நாட்டையே மிஞ்சிய ராஜஸ்தான் - ஏன் இந்த விலை உயர்வு?
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46.. தமிழ்நாட்டையே மிஞ்சிய ராஜஸ்தான் - ஏன் இந்த விலை உயர்வு?
ரூ.500 கோடி ஆடியோவால் மகாராஷ்டிர அரசியலில் பூதாகரம் - மாறி மாறி குற்றம் சாட்டும் பாஜக, சிவசேனா
ரூ.500 கோடி ஆடியோவால் மகாராஷ்டிர அரசியலில் பூதாகரம் - மாறி மாறி குற்றம் சாட்டும் பாஜக, சிவசேனா
அக்.30-இல் விண்ணில் பாய்கிறது GSLV-F18! - NVS-03 செயற்கைக்கோளின் பயன் என்ன?
அக்.30-இல் விண்ணில் பாய்கிறது GSLV-F18! - NVS-03 செயற்கைக்கோளின் பயன் என்ன?
Ind US: ஸ்கெட்ச்சு போட்டு மோடியை மிரட்டிப் பார்க்கும் அமெரிக்கா? பூரியை கொண்டு ஆயிலை விற்க வலைவிரிப்பு?
ஸ்கெட்ச்சு போட்டு மோடியை மிரட்டிப் பார்க்கும் அமெரிக்கா? பூரியை கொண்டு ஆயிலை விற்க வலைவிரிப்பு?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "அரசியல் மூர்த்தியின் ஓயாத ஒப்பாரி.." மு.க.ஸ்டாலினை அட்டாக் செய்த தவெக
MK Stalin:
MK Stalin: "6 மாசம் கூட இந்த ஆட்சி நிலைக்காது.. ஆட்சியை அப்புறப்படுத்த உழைக்க வேண்டும்" மு.க.ஸ்டாலின் பேச்சு
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற விஜய் மாமா எங்கே போனார்? கனிமொழி கொந்தளிப்பு!
குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற விஜய் மாமா எங்கே போனார்? கனிமொழி கொந்தளிப்பு!
வெள்ளை முதல் கருப்பு பெல்ட் வரை: சாதித்துக் காட்டிய குழந்தைகள்...
வெள்ளை முதல் கருப்பு பெல்ட் வரை: சாதித்துக் காட்டிய குழந்தைகள்...
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46: மத்திய அரசின் திட்டமிடல் தோல்வியே காரணம் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46: மத்திய அரசின் திட்டமிடல் தோல்வியே காரணம் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு
Embed widget