விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
இருப்பிட மற்றும் வழிகாட்டும் சேவைக்கு உதவும் நேவிக் அமைப்பை வலுப்படுத்தி குறைபாடுகளை களைய உதவும் என்விஎஸ் - 03 செயற்கைக்கோள்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி - எப்18 ராக்கெட் இரவு 11.51 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் ஏவுதலுக்கான 24 மணி நேரக்கவுன்டவுன் 29-ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்று இரவு 11.51 மணிக்கு வெற்றிகரமாக ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இதனைத்தொடர்ந்து புவி வட்டப்பாதையில் என்விஎஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
வழிகாட்டும் சேவைக்கு உதவும் செயற்கைக்கோள்
இருப்பிட மற்றும் வழிகாட்டும் சேவைக்கு உதவும் நேவிக் அமைப்பை வலுப்படுத்தி குறைபாடுகளை களையும் நோக்கில் என்விஎஸ்-03 செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் ஜிபிஎஸ் சேவைக்கு மாற்றாக இந்திய உருவாக்கமான நேவிக் தொழில்நுட்ப சேவை வலுப்பெற்று பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் வழிகாட்டும் சேவைக்கு பேருதவியாக அமையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செயற்கைக்கோளின் ஆயுட்காலாம் 12 ஆண்டுகள் என்வும் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அறிவித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















