மேலும் அறிய

ISRO Spadex: சாதனை நுனியில் இஸ்ரோ.! விண்வெளியில் 3மீ இடைவெளியில் 2 செயற்கைக்கோள்கள்

ISRO Spadex Satellites Docking: இஸ்ரோ 3மீ தொலைவு வரை 2 ஸ்பேடக்ஸ் செயற்கைக்கோள்களை அருகில் கொண்டு வந்து, சோதனையை செய்த நிலையில், சில மணி நேரங்களில் சாதனையை படைக்கவுள்ளது.

ISRO Spadex Satellites Docking Mission: ஸ்பேடக்ஸ் திட்டம் மூலம் 2 செயற்கைக்கோள்களை இணைத்து பரிசோதனை முயற்சியில் இறுதி கட்டத்தை இஸ்ரோ நெருங்கியுள்ளது. உலகில் இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே,  இரண்டு செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைக்கும் திறனைக் கொண்டுள்ளன. இந்நிலையில் ,நான்காவது நாடாக அந்த சாதனையை படைக்கும் முயற்சியில் இன்னும் சில மணி நேரங்களில் படைக்கும் என இந்தியர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்விண்கலம் ஏ (SDX01) மற்றும் விண்கலம் B (SDX02) ஆகிய இரண்டு விண்கலங்களும் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டு, 15 நிமிட பயணத்திற்குப் பிறகு பூமிக்கு மேலே 475 கிமீ தொலைவில், நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

 

விண்வெளியில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்:


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ,  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள  ஏவுதளத்தில் இருந்து PSLV-C60 ராக்கெட் மூலமாக,  ஸ்பேஸ் டாக்கிங் சோதனைக்காக இரண்டு செயற்கைகோள்களை, கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி இரவு விண்ணில் செலுத்தியது. புவியீர்ப்பு விசை குறைவாக உள்ள  இடமான விண்வெளியில் தாவரங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் ஆய்வு செய்யும் சோதனையும், இதில் அடங்கும். இந்த திட்டமானது, தட்டை பயிறை கொண்டு இலைகளை முளைக்க வைத்து வெற்றியை படைத்தது, அசத்தியுள்ளது இஸ்ரோ.

ஸ்பேடக்ஸ் திட்டம்

மேலும், இந்தியாவின் விண்வெளித் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் போற்றப்படும் SpaDeX பணியானது, மிக முக்கியமான திட்டமும் இதில் அடங்கியுள்ளது. ஸ்பேடக்ஸ் திட்டம் என்பது விண்வெளியில் தனித்தனியே சுற்றி வரும் இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும் இஸ்ரோவின் திட்டமாகும். மனித விண்வெளிப் பயணத்திற்கான முக்கியமான தொழில்நுட்பம், செயற்கைக்கோள் சேவை மற்றும் எதிர்காலப் பணிகளான ககன்யான் திட்டம் மற்றும் இந்தியாவிற்கான விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை நிறுவுதல் போன்றவற்றில் நாட்டின் திறனை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  2035க்குள் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம் அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன; இதற்கு SpaDeX  முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

3 மீ நெருக்கத்தில் செயற்கைக்கோள்கள்

இந்நிலையில், விண்ணில் உள்ள பல நூறு கி.மீ தொலைவில் உள்ள இரண்டு செயற்கைக்கோள்களை , இணைக்கும் முயற்சியில் , தற்போது 3 மீ தொலைவு வரை அருகில் கொண்டு வந்துள்ளது, பின்னர் சற்று பின் தூரம் சென்றும் சோதனை நடத்தியுள்ளது.

 

 

இந்த தருணத்தில் , உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் , இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும் பணியானது, சில மணி நேரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இஸ்ரோவின் அந்த வெற்றிச் சாதனை அறிவிப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் பலரும். 

தலைப்பு செய்திகள்

எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Embed widget