மேலும் அறிய

இந்தியாவின் மிக நீளமான ரயில் எது தெரியுமா..? 3.5 கிமீ நீளம், 295 பெட்டிகள் கொண்ட அதிசயம்!

295 பெட்டிகளுடனும், 6 என்ஜின்களுடனும் இந்திய ரயில்வே ஒரு ரயிலை இயக்கி வருகிறது என்றால் நம்ப முடிகிறதா? நாட்டிலேயே மிக நீண்ட ரயில் என்ற பெருமையை இந்த ரயில் பிடித்திருக்கிறது.

லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் ரயில்களில் பயணிக்கின்றனர். இந்தியாவின் மிக நீளமான ரயில் பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்தியாவின் மிக நீளமான ரயில் சூப்பர் வாசுகி(Super Vasuki) ஆகும். இது 3.5 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இந்த சூப்பர் வாசுகி ரயிலில் 295 பெட்டிகள் உள்ளன. இவற்றை ஒரு முனையில் இருந்து எண்ணுவது என்பது கடினமானது. இது இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் மிக நீளமான சரக்கு ரயில் ஆகும். 295 பெட்டிகளுடனும், 6 என்ஜின்களுடனும் இந்திய ரயில்வே ஒரு ரயிலை இயக்கி வருகிறது என்றால் நம்ப முடிகிறதா? நாட்டிலேயே மிக நீண்ட ரயில் என்ற பெருமையை இந்த ரயில் பிடித்திருக்கிறது. இதன் பெயர் சூப்பர் வாசுகி என பெயரிடப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். இவற்றில் மிக நீண்ட ரயில் என்ற பெருமையோடு சப்தமே இல்லாமல் சூப்பர் வாசுகி ரயில் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் இயக்கப்படும் மிக நீண்ட சரக்கு ரயில் என்ற பெருமையோடு ஓடிக் கொண்டிருக்கிறது சூப்பர் வாசுகி. இந்த ரயிலே கிட்டத்தட்ட 3.5 கிலோ மீட்டர் தொலைவு இருக்கும். இதில் 295 சரக்குப் பெட்டிகள் இடம்பெற்றுள்ளன. இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் மிக நீண்ட ரயில் என்ற பெருமையோடு ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தியாவின் மிக நீளமான ரயில் எது தெரியுமா..? 3.5 கிமீ நீளம், 295 பெட்டிகள் கொண்ட அதிசயம்!

சிறு வயதில் சரக்கு ரயிலின் பெட்டிகளை எண்ணுவதை சிறுவர்கள் விளையாட்டாக செய்வார்கள். ஆனால், இந்த சரக்கு ரயிலின் பெட்டிகளை எண்ணத் தொடங்கினால் கண்களே களைப்படைந்துவிடும் என்கிறார்கள். 295 சரக்குப் பெட்டிகளை இழுத்துச் செல்ல 6 என்ஜின்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு ரயில்வே கேட் பகுதியைக் கடந்துசெல்ல குறிப்பிட்ட நேரம் ஆகும். இந்த ரயில் தனது பயணத்தை முடிக்க 11.20 மணி நேரம் ஆகுமாம். இந்த ரயில் சேவை சத்தீஷ்கரிலிருந்து நாக்பூருக்கு இயக்கப்படுகிறது. சத்தீஸ்கரின் கொர்பா சுரங்கத்திலிருந்து நாள்தோறும் 27,000 டன் நிலக்கரியை சுமந்து செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மிக நீண்ட வடிவத்துக்காக, சிவபெருமானின் கழுத்தில் இருக்கும் வாசுகிப் பாம்பின் பெயர் இந்த சரக்கு ரயிலுக்கு சூட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் இருந்து மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரியைக் கொண்டு செல்வதில் சூப்பர் வாசுகி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மிகப்பெரிய சரக்கு ரயில், சத்தீஸ்கரில் உள்ள கோர்பாவில் இருந்து நாக்பூருக்கு அருகிலுள்ள ராஜ்நந்த்கானுக்கு ஒரே பயணத்தில் சுமார் 27,000 டன் நிலக்கரியை எடுத்துச் செல்கிறது என்பது குறிப்பிடத்தகக்து.

தலைப்பு செய்திகள்

”பாண்டி மெலாஞ்ச் 2027” புதுச்சேரி சுற்றுலாத்துறையின் கூட்டு முயற்சி - பிரமாண்ட கலாச்சார திருவிழா..!
”பாண்டி மெலாஞ்ச் 2027” புதுச்சேரி சுற்றுலாத்துறையின் கூட்டு முயற்சி - பிரமாண்ட கலாச்சார திருவிழா..!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
ரயில் டிக்கெட் வாங்குவோருக்கு புதிய மாற்றம்! அக்டோபர் 27 முதல் காப்பீடு கட்டாயம்?
ரயில் டிக்கெட் வாங்குவோருக்கு புதிய மாற்றம்! அக்டோபர் 27 முதல் காப்பீடு கட்டாயம்?

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
Embed widget