மேலும் அறிய

India Post: தபால் துறையின் 50 வருட சேவைக்கு முற்றுப்புள்ளி, செப்.1 முதல் கட் - இனிமே இப்படி தான், விலை?

India Registered Post: பதிவு அஞ்சல் சேவையை வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் நிறுத்துவதாக தபால் துறை அறிவித்துள்ளது.

India Registered Post: பதிவு அஞ்சல் சேவையை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தபா துறை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

பதிவு அஞ்சல் சேவைக்கு முற்றுப்புள்ளி:

இந்திய தபால் துறை, 50 ஆண்டுகளுக்கும் அதிகமான சகாப்தத்தின் முடிவைக் குறிக்கும் வகையில், அதன் புகழ்பெற்ற பதிவு அஞ்சல் (ரிஜிஸ்டர்ட் போஸ்ட் ) சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல், செயல்பாடுகளை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டு ஸ்பீட் போஸ்ட் உடன் ஒருங்கிணைக்கும் ஒரு பகுதியாக இந்த சேவை படிப்படியாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பகமான சேவையாக உள்ள ரிஜிஸ்டர்ட் போஸ்ட் , அதன் நம்பகத்தன்மை, மலிவு மற்றும் சட்டப்பூர்வ செல்லுபடியாகும் தன்மைக்கு பெயர் பெற்றது. லட்சக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் வேலை வாய்ப்புகள், சட்ட அறிவிப்புகள் மற்றும் அரசாங்க கடிதப் போக்குவரத்து போன்ற முக்கியமான ஆவணங்களை வழங்க இந்த பதிவு அஞ்சல் சேவை பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

25% வரை சரிவு

கடந்த 2011-12 ஆம் ஆண்டில் 244.4 மில்லியனாக இருந்த ரிஜிஸ்டர்ட் போஸ்ட்களின் எண்ணிக்கை,  2019-20 ஆம் ஆண்டில் 184.6 மில்லியனாக அதாவது 25 சதவிகிதம் வரை குறைந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பயனர்கள் டிஜிட்டல் முறைக்கு மாறியது, தனியார் கொரியர்கள் மற்றும் இ-காம்ர்ஸ்  தளவாடங்களின் போட்டியால் இந்த சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஸ்பீட் போஸ்டுடன் இணைப்பு:

அனைத்து துறைகள், நீதிமன்றங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பயனர்கள் செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் புதிய முறைக்கு மாற வேண்டும் என அஞ்சல் துறையின் செயலாளர் மற்றும் இயக்குநர் ஜெனரல் அறிவுறுத்தியுள்ளார். இந்த இணைப்பு 1986 முதல் செயல்பட்டு வரும் ஸ்பீட் போஸ்டின் கீழ் சேவைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் கண்காணிப்பு துல்லியம், விநியோக வேகம் மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இருப்பினும், ஸ்பீட் போஸ்ட் விலை அதிகமாக இருப்பதால், மலிவு விலை குறித்து கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. ரிஜிஸ்டர்ட் போஸ்ட்டின் தொடக்க விலை ரூ.25.96 ஆக இருக்க, ஒவ்வொரு 20 கிராமிற்கும் ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் 50 கிராம் எடையிலான ஸ்பீட் போஸ்டிற்கான கட்டணம் ரூ.41 இல் தொடங்குகிறது, இதனால் 20-25% செலவு அதிகமாகிறது. இந்த விலை வேறுபாடு கிராமப்புற இந்தியாவை பாதிக்கலாம், அங்கு அஞ்சல் அலுவலகங்கள் தகவல் தொடர்புக்கு மிக முக்கியமானவையாக உள்ளன. சிறு வணிகர்கள், விவசாயிகள் மற்றும் மலிவு சேவைகளை நம்பியிருக்கும் சாதாரண குடிமக்களுக்கு சுமையாக மாறலாம். டிஜிட்டல் யுகத்தில் வளர்ந்து வரும் பயனர் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய இந்த மாற்றம் அவசியம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

சட்டப்பூர்வ ஆவண பரிமாற்றத்தில் முக்கிய பங்கு:

ஸ்பீட் போஸ்ட் கண்காணிப்பு மற்றும் ஒப்புதல் போன்ற முக்கிய அம்சங்களைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று தபால் துறை உறுதியளித்தாலும், இந்த நடவடிக்கை ரிஜிஸ்டெர்ட் போஸ்ட்டை நம்பிக்கையின் அடையாளமாகக் கருதும் பயனர்கள், குறிப்பாக பழைய தலைமுறையினர் மற்றும் கிராமப்புற சமூகத்தினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரிஜிஸ்டெர்ட் போஸ்ட் பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் வேர்களைக் கொண்டுள்ளது, பாதுகாப்பான, சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை அனுப்புவதற்கான நம்பகமான முறையாக செயல்படுகிறது. வங்கிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அமைப்புகள் போன்ற நிறுவனங்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் ரிஜிஸ்டெர்ட் போஸ்ட், அதன் விநியோகச் சான்று மற்றும் மலிவு விலைக்காக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. நீதிமன்றங்களில் விநியோகம் மற்றும் இடுகையிடலுக்கான சான்றுகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை, இது அரசுத் துறைகள், வங்கிகள், நீதிமன்றங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இணக்கம் மற்றும் ஆவணங்களை உறுதி செய்வதற்கான நம்பகமான முறையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Hero First Electric Bike: இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
Embed widget