நீங்க அதிகமாக வரி விதிக்கிறீங்க; இனி நாங்களும் அப்படித்தான் – போன இடத்தில் மோடிக்கு ஷாக் கொடுத்த டிரம்ப்
எல்லா நாடுகளையும் விட இந்தியாதான் அதிகமாக வரிவிதிக்கும் நாடு என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார்.

எல்லா நாடுகளையும் விட இந்தியாதான் அதிகமாக வரிவிதிக்கும் நாடு என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார். அவர்கள் நம்மிடம் எவ்வளவு வரி வசூலிக்கிறார்களோ அதே அளவுக்கு நாமும் வரி வசூலிக்கிறோம் என குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், “எனக்கு மூன்றாவது முறையாக பிரதமராக இந்திய மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். இரு நாடுகளின் முன்னேற்றத்திற்கு ஒன்றாக பயணிப்போம். இந்தியா நடுநிலையாக இல்லை. அமைதியின் பக்கம் நிற்கிறது.
புதினுடன் ஏற்கெனவே பேசியிருக்கிறேன். இந்த யுகம் போருக்கானது இல்லை என கூறினேன். போரை முடிவுக்கு கொண்டு வரும் ட்ரம்ப்பின் முயற்சியில் நான் உடன் நிற்கிறேன். உலகின் மிக பழமையான நாடாக அமெரிக்கா உள்ளது. இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து மிகப்பெரிய நாடாக பலம்பெறும்” என்றார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை அழைத்துக்கொள்ள தயார் என தெரிவித்தார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு முன் பேசிய ட்ரம்ப், “இந்தியா அமெரிக்காவின் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கிறது. இந்தியா விதிக்கும் வரிக்கு இணையாக அமெரிக்காவும் இனி வரி விதிக்கும்” என எச்சரித்துள்ளார். பொதுவாக எதிரி நாடுகளை விட நட்பு நாடுகள்தான் அதிகம் எங்களை பாதிக்கின்றன. ஹார்லி டேவிட்சன் பைக்குகளை இந்தியாவில் விற்க முடியவில்லை. காரணம் கடுமையான வரி. இதனால் அந்த பைக்குகள் உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இதேதான் டெஸ்லாவிற்கும். அப்படி என்றால் இனி நாங்களும் அதேபோன்ற வரிகளை விதிப்போம்.” எனத் தெரிவித்தார்.
Before You Go
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
ட்ரெண்டிங் செய்திகள்






















