11 AM Headlines: நிதியமைச்சர் பேச்சால் சர்ச்சை, புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - டாப் 10 செய்திகளின் ரவுண்ட்-அப்
11 AM Headlines: உள்ளூர் முதல் உலக நாடுகளை வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை 11 மணி தலைப்புச் செய்திகளாக காணலாம்.
ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக்கொலை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா, சென்னை அடுத்த நீலாங்கரை அருகே போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதால், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை விளக்கம்.
சென்னையில் புதிய உச்சத்தில் தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.55,840 ஆக நிர்ணயம். சவரனுக்கு ரூ.160 உயர்ந்த நிலையில், ஒரு கிராம் ரூ.6.980-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் மழை தொடரும் என கணிப்பு
தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு. மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகலாம் - இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு மீனவர்கள் 5 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 5 தமிழக மீனவர்களை படகுடன் சேர்த்து கைது செய்த இலங்கை கடற்படை. ஏற்கனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 பேர் கைது.
இறைவனை நம்பு , இறைவனை நாடு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
"நீ எவ்வளவு படித்தாலும், மனதில் எவ்வளவு பெரிய அழுத்தத்தையும் எடுத்துக்கொள்ளக்கூடிய உள் சக்தி வரவேண்டும். அது தெய்வீகம் மூலமாகதான் வரும். இறைவனை நம்பு. இறைவனை நாடு' என குடும்பத்தினர் சொல்லி வளர்க்க வேண்டும். ஆத்ம சக்தி வளர்ந்தால்தான் அழுத்தத்தை தாங்கும் அளவிற்கு INNER STRENGHT வளரும்" புனேவில் பணி அழுத்தத்தால் 26 வயது இளம்பெண் உயிரிழந்தது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
திருப்பதியில் சிறப்பு பரிகார யோகம்
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டில் மாட்டுக்கொழுப்பு சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டதால், அதற்கு பரிகாரமாக சிறப்பு தோஷ நிவாரண சாந்தி யாகம் நடத்தப்படுகிறது. தலைமை அர்ச்சகர் ராமகிருஷ்ண தீட்சிதர், 8 அர்ச்சகர்கள், 3 ஆகம ஆலோசகர்கள் தலைமையில் யாகம் நடைபெறுகிறது.
இலங்கை அதிபரானார் அனுரா குமார திசநாயகே
இலங்கையின் 9வது அதிபராக பொறுப்பேற்றார் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் தலைவர் அனுரா குமார திசநாயகே. கொழும்புவில் உள்ள அதிபர் செயலகத்தில் இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி ஜெயந்த் ஜெயசூர்யா பதவிப்பிரமணம் செய்து வைத்தார்.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 4 பேர் பலி
அலபாமா மாகாணம் பர்மிங்காம் நகரில் கேளிக்கை விடுதி அருகே ந்ன்று கொண்டிருந்தவர்கள் மீது, காரில் வந்த கும்பல் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு. இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 18 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
ஹங்கேரியில் வரலாறு படைத்த இந்திய செஸ் அணி
புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஆடவர் (ஓபன்) மற்றும் மகளிர் பிரிவில் தங்கம் வென்று இந்தியா சாதனை. கோப்பைகளுடன் இந்திய வீரர்கள் உற்சாகக் கொண்டாட்டம்
துலீப் கோப்பை: மயங்க் அகர்வால் தலைமையிலான இந்தியா ஏ அணி சாம்பியன்
மயங்க் அகர்வால் தலைமையிலான இந்தியா 'ஏ' அணி, கெய்வாட் தலைமையிலான இந்தியா 'சி' உடன் மோதியது. மொத்தமாக விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்ற இந்தியா ஏ அணி 2024 துலீப் கோப்பையை வென்று சாதனை படைத்தது. மறுபுறம் கடைசிப் போட்டியில் சொதப்பிய இந்தியா சி அணி 2வது இடத்தை பிடித்தது.