மேலும் அறிய

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! டிக்கெட் வாங்கும்போதே காப்பீடு கட்டாயம்?

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருக்கை ஒதுக்கி டிக்கெட் எடுக்கப்படாத நிலையில் இக்காப்பீடு பொருந்தாது.

வரும் அக்டோபர் 27, 2026 முதல் ரயில் நிலையக் கவுன்ட்டர்களில் வாங்கப்படும் அனைத்து ரயில் டிக்கெட்டுகளுக்கும் கட்டாய பயணக் காப்பீடு வழங்கப்பட வேண்டும் என இந்திய ரயில்வேக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! டிக்கெட் வாங்கும்போதே காப்பீடு கட்டாயம்?

2023 ஜூன் மாதத்தில் நிகழ்ந்த ஒடிசா கோர ரயில் விபத்தைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் ஆர் மகாதேவன் அடங்கிய அமர்வு அக்டோபர் 6 அன்று இந்த தீர்ப்பை வழங்கியது. இதுவரை ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே விருப்பத்தேர்வாக இருந்த இந்த சேவை, இனி கவுன்ட்டர் டிக்கெட்டுகளுக்கும் கட்டாயமாக்கப்படுகிறது.

தற்போது ஐஆர்சிடிசி ஆன்லைன் தளத்தில் டிக்கெட் பதிவு செய்யும்போது ஒரு பயணியிடமிருந்து வரிகளுடன் சேர்த்து 45 பைசா மட்டுமே காப்பீட்டு பிரீமியமாக வசூலிக்கப்படுகிறது. இருப்பினும், நேரில் கவுன்ட்டர்களில் பெறப்படும் டிக்கெட்டுகளுக்கு எவ்வளவு பிரீமியம் வசூலிக்கப்படும் என்ற விவரத்தை ரயில்வே நிர்வாகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.


ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! டிக்கெட் வாங்கும்போதே காப்பீடு கட்டாயம்?

இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரயில் விபத்தின் போது உயிரிழப்பு ஏற்பட்டாலோ அல்லது நிரந்தரக் முழு ஊனம் ஏற்பட்டாலோ ரூ. 10 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.பயணத்தின் போது பகுதி அளவு ஊனம் ஏற்படும் பட்சத்தில் ரூ.7.5 லட்சமும், காயங்களுக்கான மருத்துவமனை செலவுகளுக்கு ரூ. 2 லட்சமும் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்து செல்வதற்கான போக்குவரத்து செலவிற்கு ரூ. 10,000 வழங்கப்படும்.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருக்கை ஒதுக்கி டிக்கெட் எடுக்கப்படாத நிலையில் இக்காப்பீடு பொருந்தாது. ஆனால் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருக்கை ஒதுக்கீட்டின் அடிப்படையில் இக்காப்பீட்டு சலுகை முழுமையாகப் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! டிக்கெட் வாங்கும்போதே காப்பீடு கட்டாயம்?

விபத்து நேரிட்டால் காப்பீட்டுத் தொகை கோரும் முறை ரயில் பயணத்தின் போது ஏதேனும் எதிர்பாராத விபத்துகள் நேரிட்டால், பாதிக்கப்பட்ட பயணியோ அல்லது அவர்களின் குடும்பத்தினரோ தங்களின் ரயில் டிக்கெட், பயண ஆவணங்கள் மற்றும் மருத்துவ சான்றிதழ்களைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

கவுன்ட்டர் டிக்கெட்டுகளுக்கான காப்பீட்டு சான்றிதழ் வழங்கும் முறை மற்றும் நிறுவனங்களின் வழிகாட்டுதல்களை ரயில்வே விரைவில் வெளியிடும். இந்த காப்பீட்டுத் திட்டத்திற்கான அனைத்துப் பணப்பட்டுவாடாக்களும் காப்பீட்டு நிறுவனத்திற்கும் பாதிக்கப்பட்ட பயணியின் குடும்பத்திற்குமான ஒப்பந்த விதிகளின்படியே நேரடியாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

கொல்கத்தா துர்கா பூஜையில் 3 நிமிடங்களில் கோர விபத்து.! 19 பேர் பலி.. கூட்ட நெரிசலுக்கு இதுதான் காரணமா?
கொல்கத்தா துர்கா பூஜையில் 3 நிமிடங்களில் கோர விபத்து.! 19 பேர் பலி.. கூட்ட நெரிசலுக்கு இதுதான் காரணமா?
”பாண்டி மெலாஞ்ச் 2027” புதுச்சேரி சுற்றுலாத்துறையின் கூட்டு முயற்சி - பிரமாண்ட கலாச்சார திருவிழா..!
”பாண்டி மெலாஞ்ச் 2027” புதுச்சேரி சுற்றுலாத்துறையின் கூட்டு முயற்சி - பிரமாண்ட கலாச்சார திருவிழா..!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
Chennai Cooum: துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
Trichy TVK Conference : ‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
New Secretariat: சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Hyundai Neira: 4 பவர்ட்ரெயின்களில் கெத்தா வரும் ஹுண்டாயின் 7 சீட்டர் - லாஞ்ச் எப்போது? வசதி, விலை எப்படி?
4 பவர்ட்ரெயின்களில் கெத்தா வரும் ஹுண்டாயின் 7 சீட்டர் - லாஞ்ச் எப்போது? வசதி, விலை எப்படி?
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
Embed widget