மேலும் அறிய
Advertisement
Headlines Today : ஆன்லைன் சூதாட்ட தடையா..? காமன்வெல்த்தில் கலக்கிய இந்தியர்கள்... இன்னும் பல!
Headlines Today : கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு தினம் : முக ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி
- குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைப்படி பள்ளிகளில் தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களுக்கு நூதன தண்டனை : பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
- ஆன்லைன் சூதாட்ட தடை குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கலாம் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
- அறிவியல், தொழில் துறை ஆராய்ச்சி இயக்குநராக தமிழக பெண் விஞ்ஞானி நியமனம்
- பல்வேறு புகார்களால் தனியார் கட்டுப்பாட்டில் உள்ள 1,850 கோயில்களை அதிரடியாக கையகப்படுத்தியது அறநிலைத்துறை
- மாநகர பஸ்களில் பொருத்த வெளிநாடுகளில் இருந்து சிசிடிவி கேமரா வாங்க திட்டம் : போக்குவரத்துத்துறை உயரதிகாரி தகவல்
- சென்னை கத்திப்பாராவில் வழிகாட்டி பலகை கீழே விழுந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு
- சென்னையில் 79வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியா :
- எஸ்.எஸ்.எல்.வி.டி 1 ராக்கெட் ஏவிய 2 செயற்கைக்கோள்களும் செயலிழப்பு : இஸ்ரோ அறிவிப்பு
- விவசாயத்தை நவீனமாக்குங்கள் : நிதி ஆயோக்கில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
- பாஜக முக்கிய புள்ளிகள் உள்பட 40 பேர் அயோத்தியில் சட்டவிரோதமாக மனைகளை விற்பனை செய்ததாக அயோத்தி மேம்பாட்டு ஆணையம் குற்றம்
உலகம் :
- பாலஸ்தீனில் உள்ள காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரிப்பு
- தைவான் அரசு இணையதளங்களில் சீன கொடியை ஹேக்கர்ஸ் பறக்க விட்டனர்.
- அமெரிக்கா நியூஜெர்சியில் நடைபெற்ற வருடாந்திர அழகி போட்டியில் வர்ஜீனியாவைச் சேர்ந்த இந்திய அமெரிக்க இளம்பெண் ஆர்யா வால்வேகர் மிஸ் இந்தியா யுஎஸ்ஏ 2022 என்ற பட்டத்தை வென்றுள்ளார்.
விளையாட்டு :
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- நான்கு காமன்வெல்த் போட்டிகளில் தொடர்ச்சியாக பதக்கம் வென்று இந்திய வீரர் சரத்கமல் சாதனை புரிந்துள்ளார்.
- 50 கிலோ எடைப் பிரிவில் பெண்களுக்கான குத்துச் சண்டையில் முதல் முறையாக இந்தியாவுக்காக தங்கம் வென்றார் நிக்கத் ஜரீன்.
- காமன்வெல்த் வரலாற்றில் இந்திய தடகள வீரர் எல்தோஸ் பால் ட்ரிப்ள் ஜம்ப் போட்டியில் தங்கம் வென்று அசத்தல்
- காமன்வெல்த் தொடரில் நேற்றைய 10வது நாளில் மட்டும் இந்தியா 15 பதக்கங்களை வென்று அசத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion