மேலும் அறிய
Advertisement
Headlines Today : அதிகரிக்கும் கொரோனா..! உலகக் கோப்பை கால்பந்து போட்டி அட்டவணை..! சில முக்கியச் செய்திகள்!
Today Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் காலாவதியானது – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்
- அ.தி.மு.க.வின் விதிகளை மாற்றவோ, திருத்தவோ பொதுக்குழுவால் மட்டுமே முடியும் – சி.வி.சண்முகம்
- அனைத்து பதவிகளும் ரத்தான பிறகு பொருளாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கே அதிகாரம் – வைத்திலிங்கம்
- அ.தி.மு.க.வின் பொதுக்குழுவை கூட்டுவது நீதிமன்ற அவமதிப்பு – ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம்
- 12ம் வகுப்பு மாணவர்களுக்கான கல்லூரி கனவு நிகழ்ச்சி இன்று தொடக்கம்
- தமிழ்நாட்டில் தொடர்ந்து 2வது நாளாக ஆயிரத்தை கடந்து பதிவாகும் கொரோனா
- தமிழகத்தில் இன்று காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு இன்று தேர்வு – 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
- சென்னையில் கார் மீது மரம் விழுந்த விபத்தில் வங்கி பெண் மேலாளர் உயிரிழப்பு
- ரூபாய் 2 கோடி மதிப்பிலான சிலையை வெளிநாட்டிற்கு கடத்த முயற்சி – சிலை மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
- நாளை மறுநாள் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
இந்தியா :
- கேரளாவில் ராகுல் காந்தி எம்.பி. அலுவலகம் சூறையாடல் – காங்கிரஸ் கடும் கண்டனம்
- ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ஜெர்மனி பயணம்
- தொண்டர்கள் விரும்பினால் கட்சிப்பதவியை துறக்கத் தயார் – உத்தவ் தாக்கரே உருக்கம்
- சிவசேனாவை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வுடன் ஏக்நாத் ஷிண்டே கைகோர்த்துள்ளார் – உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
- பா.ஜ.க.வின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்புமனுத்தாக்கல்
- நவீன ஏவுகணை தாக்குதல் – வெற்றிகரமாக சோதனை நடத்தியது டி.ஆர்.டி.ஓ.
- திருப்பதியில் ஒரே நாளில் 4 கோடி ரூபாய் உண்டியல் வருமானம் – தரிசனத்திற்காக 20 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்
உலகம் :
- அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் துப்பாக்கி கட்டுப்பாடு மசோதா நிறைவேற்றம்
- அமெரிக்காவில் கருக்கலைப்பிற்கான சட்ட உரிமையை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
- கருக்கலைப்பு சட்ட உரிமை ரத்து சோகமான தினம் ஆகும் – அதிபர் ஜோ பைடன்
விளையாட்டு :
- 17 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை கால்பந்து போட்டித்தொடர் – ஏ பிரிவில் இந்தியா
- லீசெஸ்டர்ஷையர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா சிறப்பான ஆட்டம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion