மேலும் அறிய
Advertisement
Morning Wrap | 05.07.2021 இன்றைய தலைப்புச் செய்திகள்..!
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
- தமிழ்நாடு முழுவதும் கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்தது.
- மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் இன்று முதல் அமல்.
- மாநிலம் முழுவதும் அனைத்து வழிபாடடுத் தலங்களிலும் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி.
- மாநிலம் முழுவதும் இன்று முதல் பொதுப்போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.
- கடந்த இரு மாதங்களாக பேருந்துகள் இயக்கப்படாத 11 மாவட்டங்களிலும் காலை 6 மணி முதல் பேருந்துகள் இயங்கத் தொடங்கியது.
- அனைத்து மாவட்டங்களிலும் நகைக்கடைகள், துணிக்கடைகள், வணிக வளாகங்களுக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி.
- மாநிலம் முழுவதும் அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதி.
- 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் உணவகங்கள் மற்றும் தேநீர் விடுதிகள் செயல்பட அனுமதி.
- மாநிலம் முழுவதும் இன்று முதல் 8 மணி வரை செயல்பட டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி.
- காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அருங்காட்சியகங்கள் இயங்க அனுமதி
- மாநிலம் முழுவதும் உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி மையங்கள் மீண்டும் திறப்பு
- அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் ஹோட்டல்கள் மற்றும் லாட்ஜ்கள் மீண்டும் திறப்பு
- கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீலகிரி மாவட்ட சுற்றுலா தளங்கள் இன்று திறக்கப்படாது – மாவட்ட நிர்வாகம்
- தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு. மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்து 867 பேருக்கு புதியதாக கொரோனா
- சென்னையில் புதியதாக 222 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
- மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 382 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பினர்.
- தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 72 பேர் உயிரிழந்துள்ளனர்.
- மேகதாது அணை திட்டத்தை கைவிட வேண்டும் – கர்நாடக முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
- மதுரையில் காப்பகத்தில் உள்ள குழந்தைகளை விற்ற காப்பக நிர்வாகி மற்றும் ஊழியர் சிறையில் அடைப்பு
- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் – ஒரு நபர் ஆணையம் இன்று முதல் மீண்டும் விசாரணையைத் தொடங்குகிறது.
- ராணுவத் தளபதி நரவனே இங்கிலாந்து மற்றும் இத்தாலி சுற்றுப்பயணம் – இரு நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளை சந்திக்கிறார்.
- கர்நாடகாவில் 100 சதவீத பயணிகளுடன் பேருந்துகள், மெட்ரோ சேவைகள் இன்று முதல் இயக்கம்.
- புதிய வேளாண் மசோதாவிற்கு எதிராக நாடாளுமன்றம் அருகே போராட விவசாயிகள் முடிவு.
- யூரோ கோப்பை கால்பந்து அரையிறுதிக்கு முன்னேறியது அர்ஜெண்டைனா அணி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion