மேலும் அறிய
Advertisement
Morning wrap | 22.07.2021 - இன்றைய தலைப்புச் செய்திகள்...!
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
- இந்தியாவில் அரசியல் தலைவர்கள், பிரமுகர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரத்தில் நாடாளுமன்ற குழு வரும் 28-ந் தேதி விசாரணை
- செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் மத்திய அரசு அதிகாரிகள் நேரில் ஆஜராக சம்மன் – நாடாளுமன்ற குழு
- பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உளவுபார்க்கப்பட்டதாக வெளியான பட்டியல் தவறானது – என்.எஸ்.ஓ நிறுவனம் அறிவிப்பு
- பிரான்சில் இருந்து 7 ஆயிரம் கிலோமீட்டர் பறந்து இந்தியா வந்தது 3 ரபேல் விமானங்கள்
- தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 1,891 பேருக்கு புதியதாக கொரோனா
- தமிழ்நாட்டில் புதியதாக 29 பேர் கொரோனா பாதிப்பால் நேற்று உயிரிழப்பு
- இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 42 ஆயிரத்தில் 15 நபருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
- இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 3 ஆயிரத்து 998 நபர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு
- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36 ஆயிரத்து 977 பேர் குணம் அடைந்தனர்
- இந்தியாவில் இதுவரை 41 கோடியே 54 லட்சத்து 72 ஆயிரத்து 455 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மத்திய சுகாதாரத்துறை
- மதுரை, வாடிப்பட்டி அருகே கோவிலில் திருடப்பட்ட 4 ஐம்பொன் சிலைகள் மீட்பு – 6 பேர் கைது
- தமிழ்நாட்டில் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை – டாஸ்மாக் நிறுவனம் எச்சரிக்கை
- உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 5 நாட்கள் சிறப்பு பூஜைக்கு பிறகு நடை சாத்தப்பட்டது
- ராமநாதபுரத்தில் விலை உயர்ந்த பொருட்களை சலுகை விலையில் தருவதாக கல்லூரி மாணவரிடம் மர்மகும்பல் ரூபாய் 21 லட்சம் மோசடி
- சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு செய்ய 25-ந் தேதி வரை கால அவகாசம்
- தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை – சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடரும் தீவிர மழை – குமுளி மலைப்பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிர ஆய்வு
- திருப்பூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
- கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை கடந்தது – 24. 25 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு
- மகாராஷ்ட்ராவில் ஏ.டி.எம். இயந்திரம் வெடிவைத்து தகர்ப்பு – 28 லட்சம் ரூபாய் கொள்ளை
- டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று முதல் விவசாயில் தொடர் போராட்டம் – போலீசார் அனுமதி
- பஞ்சாப் மாநிலத்தின் புதிய காங்கிரஸ் தலைவர் சித்துவிற்கு 65 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு
- கர்நாடகாவில் வரும் திங்கட்கிழமை நடைபெற இருந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து –
- தொண்டர்கள் யாரும் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் – கர்நாடக முதல்வர் எடியூரப்பா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion