மேலும் அறிய

குஜராத் தேர்தல்: 20 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக கிறிஸ்துவருக்கு சீட் வழங்கிய பாஜக

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக பாஜக கிறிஸ்துவர் ஒருவருக்கு சீட் வழங்கியுள்ளது. குஜராத் மாநிலம் வியாரா தொகுதியில் பாஜக சார்பில் மோகன் கொன்கனி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக பாஜக கிறிஸ்துவர் ஒருவருக்கு சீட் வழங்கியுள்ளது. குஜராத் மாநிலம் வியாரா தொகுதியில் பாஜக சார்பில் மோகன் கொன்கனி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியின் புனாஜி காமிட்டை எதிர்த்து களம் காணவுள்ளார். இவர் 4 முறை வியாரா தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவராவார்.

வியாரா தொகுதி பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. இங்கு கிறிஸ்துவ மக்கள் வாக்குகள் அதிகம். அதனால் பாஜக மோகன் கொன்கனியை நிறுத்தியுள்ளது. இத் தொகுதியில் 2..23 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 45 சதவீதம் பேர் கிறிஸ்துவர்கள். இதுவரை காங்கிரஸ் கோட்டையாக இருந்த இத்தொகுதியை குறிவைத்து பாஜக கிறிஸ்தவர் ஒருவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. இவர் 2015ல் டபி மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தவராவார். இந்நிலையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோகன், நான் பாஜகவுக்கு கடமைப்பட்டுள்ளேன். என் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை வீண் போகாது. பாஜகவின் இந்துத்துவா அடையாளம் எல்லாம் போய்விட்டது. இப்போது பாஜகவின் கொள்கை அனைவருக்குமான வளர்ச்சி. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மட்டுமே என்றார். 

வரும் டிசம்பர் 1 மற்றும் 5 தேதிகளில், குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. டிசம்பர் 8ஆம் தேதி, இமாச்சலப் பிரதேசத்துடன் இணைத்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும்.

இந்நிலையில், பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், 160 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல், முன்னாள் மோர்பி எம்எல்ஏ காந்திலால் அம்ருத்யா, கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா, ஹர்திக் படேல் உள்ளிட்ட முக்கிய நபர்களின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அதன்படி, முதலமைச்சர் பூபேந்திர படேல் கட்லோடியா தொகுதியில் போட்டியிடுகிறார். ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா ஜம்நகர் உத்தம் தொகுதியில் களமிறங்குகிறார்.

 சமீபத்தில், மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அதில், 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விபத்தின்போது, பாலத்தில் இருந்து கிழே விழுந்த மக்களை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்ததாகக் கூறப்படும் முன்னாள் எம்எல்ஏ காந்திலால் அம்ருத்யாவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி மஜுரா தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஹர்திக் படேல், விரும்காம் தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். 

கட்சியின் வேட்பாளர்களை இறுதி செய்ய புதன்கிழமை அன்று நடைபெற்ற பாஜக மத்திய தேர்தல் குழுவின் கூட்டத்திற்குப் பிறகு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் நடைபெற்ற தேர்தலில் கடும் போட்டிக்கு இடையே, பாஜக 99 இடங்களையும், பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் 77 இடங்களையும் கைப்பற்றியது. தொடர்ந்து ஏழாவது முறையாக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற வரலாறு படைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. ஆட்சிக்கு எதிரான மனநிலையை எதிர்கொள்ள பல்வேறு மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. 

அந்த வகையில், இளைஞர்களுக்கும் புதிய முகங்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என கட்சிக்குள் பேசப்பட்டு வந்தது.குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி, முன்னாள் துணை முதலமைச்சர் நிதின் படேல் மற்றும் இரு மூத்த தலைவர்களான பூபேந்திரசிங் சுடாசமா மற்றும் பிரதீப்சிங் ஜடேஜா ஆகியோர் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

தற்போது, ​​182 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில், காங்கிரசை சேர்ந்த பல எம்.எல்.ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகியதால், பாஜவின் பலம், 111 ஆக உயர்ந்துள்ளது. இந்த தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி கடும் போட்டி அளிக்கும் என்றும் கருத்துக்கணிப்புகளில் தகவல் வெளியாகியுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget