மேலும் அறிய

Go Frist Flight : 55 பயணிகளை ஏற்றாமல் சென்ற ’கோ ஃபர்ஸ்ட்’ விமானம்...விளக்கம் கேட்டு நோட்டீஸ்...

55 பயணிகளை ’கோ ஃபர்ஸ்ட்’ என்ற விமானம் ஏற்றாமல் சென்றதற்கு விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Go Frist Flight : 55 பணிகளை கோ ஃபர்ஸ்ட் என்ற விமானம் ஏற்றாமல் சென்றதற்கு விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பயணிகள் அவதி

பெங்களூரு கெம்பே கௌடா விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு கோ ஃபர்ஸ்ட் ஜி8 116 என்ற விமானம் திட்கட்கிழமை காலை 6.30 மணிக்கு புறப்பட்டது. ஆனால் இந்த விமானம் போர்ட்டிங் பாஸ்களுடன் காத்திருந்த 55 பயணிகள் இல்லாமல் அவர்களின் உடமைகளுடன் புறப்பட்டு சென்றது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விமான நிலையத்திலேயே காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் விமான நிறுவனத்தில் அலட்சியம், கவனக்குறைவை குறிப்பிட்டு பலரும் தங்களது சமூக வலைதள  பக்கத்தில் புகார்களை தெரிவித்தனர். விமான நிறுவனத்தின் செயலை கண்டித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

டிஜிசிஏ நோட்டீஸ்

இதனை அடுத்து, கவனக் குறைவாக இருந்த கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. முறையான தகவல் தொடர்பு, ஒருங்கிணைப்பு உள்ளிட்டவை இல்லாததால் இச்சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது.  இதில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், தங்களின் கடமைகளில் இருந்து தவறியதற்காக கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்தின் பொறுப்பு மேலாளர் மற்றும் தலைமை செயல்பாட்டு அதிகாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? என இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும். உரிய பதில்களுக்கு பின், நடவடிக்கை எடுக்கப்படும் என விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

”வருத்தம் அளிக்கிறது”

55 பயணிகளை ஏற்றாமல் விட்டு சென்றதற்காக கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிக்கவும் என தெரிவித்துள்ளது.  மேலும் 55 பயணிகள் வேறு விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பயணிகளுக்கு அடுத்த 12 மாதங்களில் உள்நாட்டு விமான பயண டிக்கெட்டை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக எங்கள் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. உரிய விசாரணை நடத்தப்படும் வரை சம்பந்தப்பட்ட ஊழியர்கள் வேலைக்கு வர அனுமதிக்கப்படவில்லை என கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

Bengaluru Accident : பதறிய மக்கள்.. பெங்களூருவில் சோகம்....மெட்ரோ தூண் கம்பிகள் சரிந்து விழுந்து தாய், குழந்தை உயிரிழப்பு....

தலைப்பு செய்திகள்

40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
Embed widget