மேலும் அறிய

Tirupati Temple: திருப்பதி சொர்க்கவாசல் தரிசனத்திற்கு இலவச டோக்கன்கள் - விநியோகிக்கும் தேதி அறிவிப்பு

Tirupati Temple: திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கான இலவச டோக்கன்கள் 22ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tirupati Temple: திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கான இலவச டோக்கன்கள் 22ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கோயில்:

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்காக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அங்கப்பிரதட்சனம் செய்தல், மொட்டையடித்தல் போன்ற பல நேர்த்திக் கடன்களை செய்வது வழக்கம்.  இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க, இலவச தரிசனம் மட்டுமல்லாது கட்டணம் செலுத்தியும் பல்லாயிரக்கணக்கானோர் சிறப்பு தரிசனம் செய்கின்றனர். அந்த வகையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் வழியாக தரிசிக்க வரும் 22ம் தேதி முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சொர்க்க வாசல் தரிசனத்திற்கான இலவச டிக்கெட்:

இதுதொடர்பாக திருமலையில் தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி பேசுகையில்,  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியொட்டி வரும் 23ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட வாயில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். குளிர் மற்றும் மழை காரணமாக பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதை தடுப்பதற்காக திருப்பதியில் 10 இடங்களில் 94 கவுன்டர்களில் வருகிற 22ம் தேதி முதல் நேர ஒதுக்கீடு இலவச டோக்கன்கள் வழங்கப்படும். மொத்தம் 4 லட்சத்து 23 ஆயிரத்து 500 டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது.

டிக்கெட்டுகள் எங்கு விநியோகிக்கப்படும்?

திருப்பதியில் உள்ள இந்திரா மைதானம், ராமச்சந்திரா புஷ்கரணி, சீனிவாசம் காம்ப்ளக்ஸ், விஷ்ணு நிவாசம் காம்ப்ளக்ஸ், பூதேவி காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜ சுவாமி இரண்டாவது சத்திரம், பைராகிப்பட்டேடாவில் உள்ள ராமாநாயுடு மேல்நிலைப்பள்ளி, எம்.ஆர்.பள்ளியில் உள்ள ஜில்லா பரிஷத் மேல்நிலைப் பள்ளி, ஜீவகோனாவில் உள்ள ஜில்லா பரிஷத் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களிலும், திருமலையில் உள்ள உள்ளூர் மக்களுக்காக கவுஸ்துபம் ஓய்வறையிலும் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

பக்தர்களுக்கான அறிவுரை:

எனவே வைகுண்ட ஏகாதசியொட்டி வரும் 23ம் தேதி முதல் ஜனவரி 1ம்தேதி வரையிலான 10 நாட்களுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் அல்லது 22ம்தேதி முதல் வழங்கப்படும் நேர ஒதுக்கீடு இலவச சர்வ தரிசன டோக்கன் உள்ள பக்தர்கள் மட்டுமே ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வருகிற 22, 24, 31 மற்றும் ஜனவரி 1ம் தேதிகளில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவ சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 25 முதல் 30ம் தேதி வரை பக்தர்கள் இல்லாமல் இந்த சேவைகள் நடைபெறும்.

23 முதல் ஜனவரி 1ம்தேதி வரை சகஸ்ர தீப அலங்கார சேவை பக்தர்கள் இல்லாமல் நடைபெறும். வைகுண்ட ஏகாதசி அன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை மலையப்ப சுவாமி ஸ்ரீ தேவி பூதேவியுடன் தங்க ரதத்தில் கோயிலின் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து அருள் பாலிக்க உள்ளார். வைகுண்ட துவாதசியை முன்னிட்டு அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும்.

டிசம்பர் 17 முதல் ஜனவரி 14ம் தேதி வரை மார்கழி மாதம் என்பதால் காலையில் சுப்ரபாத சேவைக்குப் பதிலாக திருப்பாவை பாராயணம் நடைபெறும். 28ம் தேதி திருமலையில் பிரணாயகலக உற்சவம் நடைபெறுகிறது” என தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி தெரிவித்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Embed widget