Molnupiravir pill: கொரோனா சிகிச்சையில் மோல்னுபிரவீர்.. என்ன மருந்து இது? எவ்வாறு பயனளிக்கும்?
கர்ப்ப காலத்தில் உள்ள பெண்கள் இந்த மருந்தை எடுத்துக்கொள்ள அனுமதியில்லை.
கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக மெர்க் நிறுவனம் தயாரித்த மோல்னுபிரவீர் தடுப்பு மருந்துக்கு இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கினார்.
சளிக்காய்ச்சலுக்காக (Influenza) தயாரிக்கப்பட்ட இந்த மருந்து, தற்போது கோவிட்-19 சிகிச்சைக்கு ஏற்றவாறு மாற்றி உருவாக்கப்பட்டுள்ளது (RePurposing) . இந்தியாவில், கொரோனா தொற்றுக்கு எதிராக ஒப்புதல் அளிக்கப்பட்ட முதல் வாய்வழி தடுப்பு மருந்து இதுவாகும்.
Molnupiravir, an antiviral drug, will now be manufactured in the country by 13 companies for restricted use under emergency situation for treatment of adult patients with COVID-19 and who have high risk of progression of the disease. (4/5)
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) December 28, 2021
அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகம்/மெர்க் ரிட்ஜ்பேக் பையோதெராபெட்டிக்ஸ் (Merck and Ridgeback Biotherapeutics) மருந்து நிறுவனம் இந்த மருந்தை தயாரித்தது. மூன்றாம் கட்ட மனிதப் பரிசோதனையில் 1,550 பேரிடம், தடுப்பு மருந்து வழங்கி பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு திறனைஆய்வு செய்தது.
பல்வேறு மருத்துவ சோதனைகளில், லேசானது முதல் மிதமானது வரையிலான தொற்று உள்ள நோயாளிகளின் சிகிச்சையில் இந்த மருந்து மிகச்சிறந்த பலனைத் தருவது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. உயிரிழப்பு போன்ற தீவிரமான பாதிப்பை 50% தடுக்க உதவுகிறது. மேலும், கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பின், இரத்தப் போக்கு மற்றும் இரத்தம் உறைதல் போன்ற சம்பவங்கள் ஏற்பட்டது மிகக் குறைவாக இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மருந்தை எப்படி எடுத்துக்கொள்வது?
மிதமான அறிகுறி கொண்ட நோயாளிகள், ஒரு நாளைக்கு இரண்டு முறை, 200எம்ஜி நான்கு மாத்திரைகளை உணவு சாப்பிட்ட ஒரு மணிநேரத்திற்குப் பிறகு தொடர்ந்து 5 நாட்கள் (மொத்தம் நாற்பது மாத்திரைகள் )எடுத்துக்கொள்ள வேண்டும். ஐந்து நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக மருந்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
18 வயதுக்கு குறைவானவர்கள், இதை பயன்படுத்த அனுமதியில்லை.
உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையில் இதனை பயன்படுத்தக்கூடாது.
கர்ப்ப காலத்தில் உள்ள பெண்கள் இந்த மருந்தை எடுத்துக் கொள்ள அனுமதியில்லை.
பைசர்:
முன்னதாக, கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக பைசர் நிறுவனம் தயாரித்த கொரோனா மாத்திரைக்கு அமெரிக்காவின் எஃப்.டி.ஏ ஒப்புதல் வழங்கியது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற பல்வேறு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு, அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் பயன்படுத்த அனுமதி தருமாறு, கொரோனா தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழுவின் 23-வது கூட்டத்தில் பரிந்துரைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்