நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேரின் உடல்கள் கோவை சூலூரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்டன


டெல்லி கொண்டு செல்லப்பட்ட பிறகு, உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.


விமான விபத்தின்போது உயிரிழந்த பிபின்ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோர் உடல்கள் மட்டுமே இதுவரை அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. பிற வீரர்களின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. ஆனாலும், அவர்களது பிரேதங்கள் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெர்குலஸ் விமானத்தில் டெல்லி கொண்டு செல்லப்பட்டுள்ளன.


அவர்களது உடல்களை அடையாளம் காண்பதற்காக, உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தார் அவரவர் சொந்த ஊர்களில் இருந்து டெல்லி வரவழைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களது உறவினர்கள் உயிரிழந்த வீரர்களின் உடல்களை அடையாளம் காட்ட உள்ளனர்.  உறவினர்கள் அடையாளம் காட்டுவதுடன், அறிவியல் ரீதியாகவும் அவர்களது உடல்கள் அடையாளம் காணப்பட உள்ளது. அதிகாரப்பூர்வமாக வீரர்களின் உடல்கள் உறுதி செய்யப்பட்ட பின்னரே, அவரவர் குடும்பத்தாரிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட உள்ளது.




முன்னதாக, ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற காட்டேரி பகுதி முழுவதும் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அந்த பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஏர்மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், தமிழ்நாடு காவல்துறை சார்பிலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தமிழக காவல்துறையினரும் அந்த இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களுக்கு இன்று காலை வெலிங்டனில் உள்ள ராணுவ கல்லூரியில் முழு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.







மேலும்  படிக்க..


CDS Chopper Crash | ‛எனக்கு டவுட் இருக்கு... சுப்ரீம் கோர்ட் விசாரிக்கணும்’ -ஹெலிகாப்டர் விபத்து குறித்து சு.சாமி., பகீர்!


Next CDS of India: நாட்டின் அடுத்த தலைமைத் தளபதி யார்? - நீடிக்கும் குழப்பம்!


Mi-17 Black Box: விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு...


“ஒரு மருத்துவராக... சிகிச்சை பெற்று வரும் விமானி வருணை சந்தித்தேன்” - ஆளுநர் தமிழிசை பேட்டி!


Coonoor Chopper Crash | சௌர்யா சக்ரா விருதிலிருந்து ககன்யான் திட்டம்வரை... யார் இந்த கேப்டன் வருண் சிங்?



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண