மேலும் அறிய

Tirupati: திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற சிறுவன்.. தாக்கிய சிறுத்தை.. அதிர வைக்கும் ‘திக் திக்’ நிமிடங்கள்..!

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய பாதயாத்திரை சென்ற குழுவில் இருந்த சிறுவனை சிறுத்தை இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய பாதயாத்திரை சென்ற குழுவில் இருந்த சிறுவனை சிறுத்தை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உலகின் பணக்கார கடவுள்களில் ஒருவராக உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியா முழுவதும் இருந்து வரும் பக்தர்களுக்காக இலவச தரிசனம், சிறப்பு கட்டண தரிசனம், விஐபி தரிசனம் ஆகிய வசதிகள் மூலம் எளிதாக ஏழுமலையானை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் நடைபாதையாக வழியாக வரும் பக்தர்கள் காத்திருக்காமல் விரைந்து தரிசனம் செய்யும் வசதியும் தேவஸ்தானம் தரப்பில் செய்யப்பட்டுள்ளது. 

இதனிடையே ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள அடோனில் இருந்து பக்தர்கள் குழு ஒன்று ஏழுமலையானை தரிசிக்க அலிபிரி நடைபாதை வழியாக திருமலைக்கு நேற்று இரவு புறப்பட்டது. இந்த குழு ஏழாவது மைல் அருகே வந்த போது உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த குழுவில் இருந்த நான்கு வயது சிறுவன் கௌசிக்கை தாக்கியது. இதனால் அலறிய அச்சிறுவனை காட்டுக்குள்ளும் தலைமுடியை கவ்வி இழுத்துச் சென்றது. 

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த குழுவினர், உடனடியாக உள்ளூர் வியாபாரிகள் மற்றும் அருகில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் உதவியுடன் வனப்பகுதிக்குள் நுழைந்தனர். டார்ச்லைட், கற்களை வீசியும், ஒலி எழுப்பியும் சிறுவனை மீட்க முயன்றனர். பொதுமக்களின் செயல்களை கண்டு பயந்து போன சிறுத்தை வனப்பகுதியில் உள்ள போலீஸ் அவுட்போஸ்ட் பின்னால்  விட்டுச் சென்றது. உடனடியாக கௌசிக்கை மீட்ட பாதுகாப்பு படையினர் ஏற்கனவே தயார் நிலையில் இருந்த ஆம்புலன்சில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். 

சிறுத்தை தாக்கியதில் சிறுவனின் காது,  கழுத்தில் காயம் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பின் சிறுவன்  மேல் சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

தலைப்பு செய்திகள்

Independence Day 2026: சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் யார்? முதல் பட்ஜெட், தேர்தல் எப்போது நடந்தது? - சுவாரஸ்ய தகவல்கள் இதோ
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் யார்? முதல் பட்ஜெட், தேர்தல் எப்போது நடந்தது? - சுவாரஸ்ய தகவல்கள் இதோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Embed widget