"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!

டெல்லியில் உள்ள வீட்டில் தனது மனைவியுடன் கையும் களவுமாக பிடிபட்ட அவரது காதலரை அந்த பெண்ணின் கணவர் சித்திரவதை செய்து கொலை செய்துள்ளார். விரலில் உள்ள நகங்களை வெட்டியுள்ளார்.

Continues below advertisement

வீட்டில் தனது மனைவியுடன் கையும் களவுமாக பிடிபட்ட அவரது காதலரை அந்த பெண்ணின் கணவர் சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவம் தேசிய தலைநகர் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

தனிப்பட்ட காரணங்களுக்காக நடைபெறும் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, திருமணம் மீறிய உறவின் காரணமாக நடைபெறும் கொலைகள் மனதை பதற வைக்கும் இருக்கின்றன. அம்மாதிரியான ஒரு சம்பவம்தான் டெல்லியில் நடைபெற்றுள்ளது.

தேசிய தலைநகரை உலுக்கிய கொலை:

சாஸ்திரி பார்க் பகுதியில் அமைந்துள்ள வீட்டில் தனது மனைவியுடன் கையும் களவுமாக பிடிபட்ட அவரது காதலரை அந்த பெண்ணின் கணவர் சித்திரவதை செய்து கொலை செய்துள்ளார். விரலில் உள்ள நகங்களை வெட்டியுள்ளார்.

இதுகுறித்து வடகிழக்கு டெல்லியின் துணை போலீஸ் கமிஷனர் ராகேஷ் பவேரியா கூறுகையில், "நேற்று காலை 11 மணியளவில், தனது வீட்டில் மனைவியுடன் அவரது காதலன் பிடிபட்டபோது, ​பெண்ணின் கணவர் கோபமடைந்து தனது மனைவியையும் ரித்திக் வர்மாவையும் (காதலன்) மோசமாக தாக்கியுள்ளார்" என்றார்.

"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை"

கொலை செய்யப்பட்ட ரித்திக் வர்மாவின் மாமா, இதுதொடர்பாக பேசுகையில், "ரித்திக்கின் நகங்களை வெட்டி கடுமையாக சித்ரவதை செய்துள்ளனர். அவரது உடலின் ஒவ்வொரு பகுதியிலும் காயங்கள் இருந்தன" என்றார்.

சம்பவம் நடந்த வீட்டின் அண்டைவீட்டார், கொலை தொடர்பாக பேசுகையில், "ரித்திக் மற்றும் தன்னுடைய மனைவி இருவரையும் அந்த நபர் கடுமையாக தாக்கியுள்ளார். ரித்திக் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களால் மோசமாக தாக்கப்பட்டிருக்கிறார். ரித்திக் டெம்போ ஓட்டுநர். அவருடைய பெற்றோருக்கு அவர் ஒரே மகன்" என்றார்.

சம்பவ இடத்தில் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி காணப்பட்ட ரித்திக்கை அவரது உறவினர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். பின்னர்தான், அங்கு காவல்துறை அதிகாரிகள் சென்றிருக்கின்றனர். இரவு 9 மணியளவில் ரித்திக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. 

இதையும் படிக்க: IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?

Continues below advertisement