நாட்டில் உள்ள ஐஐடி-க்களில் முதன்முறையாக ‘நுண்கலை மற்றும் கலாச்சாரத் துறையில் சிறந்து விளங்குவோருக்கான’ (Fine Arts and Culture Excellence – FACE) மாணவர் சேர்க்கையை 2025-26 கல்வியாண்டு முதல் இளங்கலை பட்டப்படிப்பில் அறிமுகப்படுத்துகிறது. நுண்கலை மற்றும் கலாச்சாரத்தில் சிறந்து விளங்கும் மாணவ-மாணவிகளுக்கு வெகுமதி அளித்து அவர்களை ஊக்குவிப்பதுதான் ஃபேஸ் (FACE) மாணவர் சேர்க்கையின் நோக்கமாகும்.
எத்தனை இடங்கள்?
2025-26 கல்வியாண்டு முதல், பி.டெக், மற்றும் பிஎஸ் பாடத்திட்டங்களில் ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் தலா 2 இடங்கள் வீதம் ஒதுக்கீடு செய்யப்படும். இதில் மாணவிகளுக்கு ஒரு இடமும், இரு பாலினருக்கும் பொதுவாக மற்றொரு இடமும் ஒதுக்கப்படும் என்று ஐஐடி சென்னை தெரிவித்துள்ளது.
‘ஃபேஸ்’ மாணவர் சேர்க்கைக்காக, ஐஐடி சென்னையில் உள்ள ஒவ்வொரு துறையின் இளங்கலைப் பட்டப் படிப்பிலும் தலா இரண்டு இடங்கள் கூடுதலாக உருவாக்கப்படும். இதில் இந்திய நாட்டினர் மற்றும் ஜேஇஇ (அட்வான்ஸ்ட்) 2025 விண்ணப்பப் பதிவின்போது இந்தியக் குடிமகன்களுக்கு நிகராகக் கருதப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்/ இந்திய வம்சாவளி விண்ணப்பதாரர்கள் [Overseas Citizen of India/ Person of Indian Origin (OCI/PIO)] ‘ஃபேஸ்’ மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெறுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான தகுதி என்ன?
- விண்ணப்பதாரர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் ஜேஇஇ (அட்வான்ஸ்ட்) 2025-க்குத் தகுதி பெற்றிருக்க வேண்டும். 2025 ஜேஇ (அட்வான்ஸ்ட்) பொதுவான தரவரிசைப் பட்டியலில் (Common Rank List – CRL) அல்லது பிரிவு வாரியான தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். தரவரிசைப் பட்டியலில் உள்ள நிலை, தரவரிசைப் பட்டியல்கள் தயாரிக்கப்படும் எந்தப் பிரிவிலும் இருக்கலாம். இதன் மூலம் இடஒதுக்கீட்டுப் பயன்கள் பாதிக்கப்படாமலும், அதே நேரத்தில் கல்வித்தேவை நீர்த்துப் போகாமலும் இருப்பது உறுதி செய்யப்படும்.
- விண்ணப்பதாரர் ஐஐடி-க்களுக்கான தகுதி அளவுகோலின் அடிப்படையில் பன்னிரண்டாம் வகுப்பில் தேவையான குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்றிருத்தல் அவசியம்.
- விண்ணப்பதாரர்கள் .நுண்கலை மற்றும் கலாச்சார செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் வகையில் பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றில் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.
- அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வகையின்படி ஒவ்வொரு வேட்பாளருக்கும் அவர்களின் நுண்கலை மற்றும் கலாச்சார சிறப்பின் அடிப்படையில் ஒரு மதிப்பெண் ஒதுக்கப்படும்.
- பல்வேறு நுண்கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகள்/ விருதுகள்/ கல்வி உதவித்தொகை ஆகியவற்றில் விண்ணப்பதாரர்களின் செயல்திறன் அடிப்படையில் அவர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் பிரத்யேக ‘ஃபேஸ்’ தரவரிசைப் பட்டியல் (FACE Ranka List -FRL) தயாரிக்கப்படும்.
தொலைபேசி எண்: 044 22578220
கூடுதல் தகவல்களுக்கு - https://jeeadv.iitm.ac.in/face