இவர் என்ன நடிகரா? இல்லை பிச்சைக்காரரா?... ட்விட்டரில் வைரலான யாசகரின் போட்டோ!
ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ள பிச்சைக்காரர் படம் ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஒரு சில படங்கள் வேகமாக வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது ஒரு படம் ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இது ஒரு பிச்சைக்காரரின் படம் என்று ஒருவர் பதிவிட்டுள்ள படம் தான்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் படத்தில் டெல்லி பிச்சைக்காரர் என்று ஒருவரின் படத்தை பதிவிட்டுள்ளார். அந்தப் படத்தில் இருக்கும் நபர் டிப்டாபாக ஒரு கருப்பு நிற டி செர்ட் ஒன்றை போட்டுள்ளார். அத்துடன் அவர் ஒரு சூப்பர் கண்ணாடி ஒன்றையும் அணிந்துள்ளார்.
Delhi beggars 🤷🏻♂️ pic.twitter.com/p8GfLrj0TI
— Kawaljit Singh Bedi (@kawaljit) August 10, 2022
இந்தப் போட்டோவை பார்த்த பலரும் அது தொடர்பாக தங்களுடைய கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இவர் ஒரு பாலிவுட் நடிகரை போல் இருக்கிறார். இவர் பிச்சை எடுக்கிறார் என்றால் நம்ப முடியவில்லை என்று சில கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் இவர் நடிகர் ஹிர்திக் ரோஷன் போன்று உள்ளார் என்று கூறி அவருடைய படத்தையும் பதில் பதிவாக செய்து வருகின்றனர். இதன்காரணமாக அந்தப் பதிவு வேகமாக வைரலாகி வருகிறது.
Lot of tweets saying he may not be a beggar...I just realised I have dashcam footage. https://t.co/mf54uI2GmN pic.twitter.com/iaO2OWaROp
— Kawaljit Singh Bedi (@kawaljit) August 12, 2022
இந்தப் போட்டோவிற்கு சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். அத்துடன் பலரும் இந்தப் பதிவை ரிட்வீட் செய்து வருகின்றனர்.
Looks like Aditya Roy Kapoor. Lolhttps://t.co/yKHsiXv4pa
— Tiramissu_128 (@128Tiramissu) August 12, 2022
hrithik roshan lite https://t.co/UFYCZn99YS
— Vxdhxxx//im okay (lie) (@sadfroggo69) August 12, 2022
Once I think it's #Vikramvedha look
— Ashish Robinhood pandey (@ashispandey1693) August 10, 2022
He's quite resemble like pic.twitter.com/A0oQPkWuI5
இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்