மேலும் அறிய

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் ஆக. 31வரை ஊரடங்கு நீட்டிப்பு

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் ஆக. 31வரை ஊரடங்கு நீட்டித்தது புதுச்சேரி அரசு உத்தரவு

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு ஆக. 31-ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி மாநில செயற்குழு உறுப்பினரும், நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை செயலருமான விக்ராந்த் ராஜா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் கொரோன  தொற்று பரவல் காரணமாக, ஆகஸ்ட் 15-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. இது கூடுதல் தளர்வுகளுக்கு ஆக. 31 ஆம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இதன்படி, தினமும் இரவு 10.30 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். அரசியல், சமூக நிகழ்வுகள், பொழுது போக்கு தொடர்பான நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் ஆக. 31வரை ஊரடங்கு நீட்டிப்பு

அனைத்து வித கடைகள், வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, குளிர்சாதன வசதியின்றி இயங்க அனுமதி அளிக்கப்படும். காய்கறி மற்றும் பழக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படும். பெரிய மார்க்கெட்டில் உள்ள கடைகள் எப்போதும் போல் இயங்கலாம். அனைத்து வித உணவகங்கள், தங்கும் விடுதிகள், மதுக்கூடங்களுடன் கூடிய விடுதிகளில் இரவு 10 மணி வரை, 50 சதவீதம் பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படும். தேநீர் கடைகள், பழச்சாறு நிலையங்கள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கலாம்.

சில்லறை மதுக்கடைகள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வழக்கம் போல் இயங்கலாம். சரக்கு போக்குவரத்துக்கு வழக்கம் போல் அனுமதி அளிக்கப்படும். அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து (பேருந்து, டாக்ஸி, ஆட்டோ) இரவு 9 மணி வரை இயங்கலாம். பூங்காக்கள், கடற்கரை சாலைகளில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும். அனைத்து வழிபாட்டு தலங்களிலும் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனம், பூஜைகள் செய்ய அனுமதி அளிக்கப்படும். வழிபாட்டுத் தலங்களில் 25 பேர்களுடன் திருமணம் செய்யலாம்.

திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 100 பேரும், இறுதி சடங்குகளில் 20 பேர் மட்டும் கலந்துகொள்ளலாம். தொழிற்சாலை பணிகள், கட்டுமானம், உற்பத்தி பணிகள் வழக்கம் போல் நடக்கலாம். அனைத்து வித விளையாட்டுக்களுக்கும், பார்வையாளர்களின்றி அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாட்டுச் சாக்கரை என நினைத்து எலி மருந்தை பாலில் கலந்த தாய்; 2 குழந்தைகள் பலி; தாய் கவலைக்கிடம்!

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!
ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி சிலிண்டர்: மானியம் முதல் KYC வரை அதிரடி மாற்றங்கள்!விபரம் இதோ..
ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி சிலிண்டர்: மானியம் முதல் KYC வரை அதிரடி மாற்றங்கள்!விபரம் இதோ..
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
Embed widget