![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Congress Youtube Channel: யூட்யூப் தளத்தில் இருந்து நீக்கம்... ஹேக் செய்யப்பட்டதா காங்கிரஸ் கட்சியின் சேனல்?
இந்திய தேசிய காங்கிரஸின் சேனல் 2 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
![Congress Youtube Channel: யூட்யூப் தளத்தில் இருந்து நீக்கம்... ஹேக் செய்யப்பட்டதா காங்கிரஸ் கட்சியின் சேனல்? Congress YouTube Channel Deleted Party tweets Cause Not Known Yet Congress Youtube Channel: யூட்யூப் தளத்தில் இருந்து நீக்கம்... ஹேக் செய்யப்பட்டதா காங்கிரஸ் கட்சியின் சேனல்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/24/18e5f66bb22ba12b3d81ce2598e703f61661349143492224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ யூட்யூப் பக்கம் யூட்யூப் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொழில்நுட்பக் காரணத்தால் யூட்யூப் பக்கம் நீக்கப்பட்டதா அல்லது எவரேனும் ஹேக் செய்துள்ளனரா என தாங்கள் விசாரணை நடத்தி வருவதாக காங்கிரஸ் தலைமை முன்னதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், தாங்கள் விரைவில் சேனலை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், கூகுள் யூட்யூப் குழுக்களுடன் தொடர்பில் தாங்கள் இருப்பதாகவும் தங்களது அதிகாரப்பூர்வ பக்கத்தில் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
Hi,
— Congress (@INCIndia) August 24, 2022
Our YouTube channel - 'Indian National Congress' has been deleted. We are fixing it and have been in touch with Google/YouTube teams.
We are investigating what caused this - a technical glitch or sabotage.
Hope to be back soon.
Team
INC Social Media
2 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை கொண்ட இந்திய தேசிய காங்கிரஸின் சேனல், பெரும்பாலும் அதன் தலைவர்களின் செய்தியாளர் சந்திப்பு வீடியோக்களை வெளியிட்டு வந்தது.
View this post on Instagram
மேலும் நாட்டின் சூழல், காங்கிரஸ் கட்சியின் வரலாறு, சுதந்திரப் போராட்ட வரலாறு ஆகியவை குறித்தும், மத்திய அரசின் மீதான தங்கள் குறைகளையும் முன்வைத்து வீடியோக்களைப் பகிர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)