தொழிலாளியின் குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை - ஒரே 'செக்'கில் ரூ.16 கோடி வழங்கிய நிறுவனம்!
கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) தலைவர் அளித்த ஒப்புதலுக்குப் பிறகு, ஊசி செலுத்துவதற்கான ஜேர்ஜென்ஸ்மாவின் செலவு ரூ.16 கோடியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
ஆபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளியின் மகள் சிகிச்சைக்கு ஒரே செக்கில் 16 கோடி ரூபாய் வழங்கி உதவி செய்துள்ளது ஒரு நிறுவனம்.
கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு, மும்பையைச் சேர்ந்த 6 மாத குழந்தை திரா காமத்தின் சிகிச்சைக்கான மருந்துக்கான இறக்குமதி வரி மற்றும் ஜிஎஸ்டியில் ரூ.6.5 கோடியை தள்ளுபடி செய்தது.
சத்தீஸ்கரில் 23 மாத குழந்தை சிருஷ்டி ராணி அதே அரிய மரபணு நோயான ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபியால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த குழந்தைக்கு சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் சிகிச்சைக்கான செலவு தொகையை அளித்துள்ளாது.
கிச்சைக்காக இறக்குமதி செய்யப்பட வேண்டிய அதிக விலையுயர்ந்த மருந்தின் முழுச் செலவையும் ஏற்க முடிவு செய்த அந்த நிறுவனம், .கோல் இந்தியா லிமிடெட் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு கடந்த வியாழக்கிழமை ரூ.16 கோடி டிமாண்ட் டிராஃப்டை அனுப்பியது.
’2 வயது குழந்தைக்கு வந்துள்ள அரிய நோய்’ 22 கோடி ரூபாய்க்கு மருந்துவாங்க உதவி கேட்கும் பெற்றோர்..!
கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) தலைவர் அளித்த ஒப்புதலுக்குப் பிறகு, ஊசி செலுத்துவதற்கான ஜேர்ஜென்ஸ்மாவின் செலவு ரூ.16 கோடியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. ஊசி மற்றும் மருந்துகள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளன" என்று எஸ்இசிஎல் செய்தித் தொடர்பாளர் சனிஷ் சந்திரா கூறினார்.
குழந்தையின் தந்தை சதீஷ் குமார் ரவி, கோர்பா மாவட்டத்தில் சிஐஎல் இன் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தி செய்யும் துணை நிறுவனமான எஸ்இசிஎல்-இல் சுரங்கத் தொழிலாளியாக பணிபுரிகிறார்.
"என் மகளுக்கு கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பரில் வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எஸ்எம்ஏ நோய் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது குழந்தை கோர்பாவில் உள்ள எனது வீட்டில் வென்டிலேட்டர் துணையுடன் சிகிச்சை பெற்று வருகிறார்” என்று அவர் கூறினார்.
பிப்ரவரியில் பிலாஸ்பூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வென்டிலேட்டரில் வைக்க வேண்டியிருந்தபோது, சிருஷ்டி 13 மாத குழந்தை. பின்னர் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிகிச்சைக்கு பணம் இல்லாத காரணத்தால் குடும்பத்தினர் வீடு திரும்பியுள்ளனர். குழந்தைகளை குறிவைத்து தாக்கும் மிஸ்சி நோய்...! - கொரோனாவின் புது வெர்ஷன்...! தற்காத்துக்கொள்வது எப்படி
எஸ்எம்ஏ நோய் தாக்கினால் முதுகுத்தண்டு மற்றும் மூளைத்தண்டில் உள்ள நரம்பு செல்கள் இழப்பால், தசைகளின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் போய் விடும். இதுமரபணு கோளாறு என்று கூறப்படுகிறது.
ரவி தனது குடும்பத்தினருக்கு இதுவரை கிடைத்த அனைத்து ஆதரவையும் மீறி, நிறுவனத்த்தின் தாராள உதவிக்கு பிறகுதான், குழந்தையின் தாய், தந்தை முகத்தில் வெளிச்சத்தைக் காண முடிந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்