மேலும் அறிய

10 மாத குழந்தைக்கு நடந்த திருமணத்தை ரத்துசெய்தது ராஜஸ்தான் நீதிமன்றம்..

ராஜஸ்தானில் 10 மாத குழந்தையாக இருந்தபோது செய்யப்பட்ட குழந்தை திருமணம் செல்லாது என்று ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

ராஜஸ்தான், தன்தனியா கிராமத்தைச் சேர்ந்தவர், 18 வயதான மைனா. 2001-ஆம் ஆண்டில் இவர் 10 மாத குழந்தையாக இருந்தபோது, இவருக்கும் உதய்சர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம்  செய்து வைக்கப்பட்டது. தற்போது 18 வயதான மைனா, தனது குழந்தை திருமணத்தை ரத்துசெய்ய உதவுமாறு க்ருத்தி பார்தி என்ற சமூக ஆர்வலரிடம் உதவி கோரினார்.

இதையடுத்து, க்ருத்தி பார்தி கடந்த பிப்ரவரி மாதம் ஜோத்பூர் குடும்பநல நீதிமன்றத்தில் இந்த திருமணத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இதையறிந்த மைனாவின் மாமியார் இந்த வழக்கைத் திரும்பப்பெறுமாறு மைனாவையும், அவரது குடும்பத்தையும் மிரட்டியுள்ளார். ஆனாலும், மைனா இந்த வழக்கை நடத்துவதில் உறுதியாக இருந்தார்.

10 மாத குழந்தைக்கு நடந்த திருமணத்தை ரத்துசெய்தது ராஜஸ்தான் நீதிமன்றம்..

இந்த நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி பிரதீப்குமார் ஜெயின் இந்த திருமணம் செல்லாது என்றும், இதனால் இந்த திருமணத்தை ரத்து செய்வதாகவும் உத்தரவிட்டார். மேலும், மைனா குழந்தையாக இருந்தபோது அவரை திருமணம் செய்த அந்த நபருக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. பின்னர், அவரும் திருமணம் செல்லாது என்ற உத்தரவுக்கு ஒப்புக்கொண்டார்.  நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு மைனா கூறும்போது, ”இந்த திருமணம் என்னை பாழாக்கிவிட்டது. இந்த குழந்தை திருமணத்தை ரத்து செய்ததன் மூலம், எனக்கு புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது. இனி நான் படிக்கப்போகிறேன்” என்று தெரிவித்துள்ளார்  

தலைப்பு செய்திகள்

ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!
ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி சிலிண்டர்: மானியம் முதல் KYC வரை அதிரடி மாற்றங்கள்!விபரம் இதோ..
ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி சிலிண்டர்: மானியம் முதல் KYC வரை அதிரடி மாற்றங்கள்!விபரம் இதோ..
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Embed widget