Breaking News LIVE: முதலமைச்சர் ஸ்டாலினின் டெல்லி பயணம் ஒத்திவைப்பு
-Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
CM Delhi : முதலமைச்சர் ஸ்டாலினின் டெல்லி பயணம் ஒத்திவைப்பு
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, டெல்லி பயணத்தை ஒத்திவைத்து வீடு திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்
புதுச்சேரியில் மாநில அரசு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு வெள்ளிக்கிழமை தோறும் இரண்டு மணி நேரம் குறைக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
வரும் 30 ஆம் தேதி 8 மாவட்டங்களிலும் மே 1 ஆம் தேதி 10 மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 30 ஆம் தேதி மற்றும் மே 1 ஆம் தேதி நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வாஷிங்டன் சுந்தர் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக்கின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் என்று சன்ரைசர்ஸ் அணி தெரிவித்துள்ளது.
கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழ்மொழிக்கு ஆற்றிய பணிகள் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒன்பதாம் வகுப்பு பாடத்தில் ’செம்மொழியாம் தமிழ்மொழி’ என்கிற தலைப்பில் கலைஞர் கருணா நிதி அவர்களின் தமிழ்ப்பணிகள் இடம்பெற்றுள்ளது.
அதிமுக விவகாரம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
அரசு அறிவித்த திட்டங்கலை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரிகள் உடனான ஆலோசனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மே மாதம் 9ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது.
கோவை பொதுக்கூட்டத்தில் தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகக் கூறி நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை செயலர் கார்த்திக் மீது உக்கடம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சிறந்த சமூகசேவை ஆற்றியவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுப்பரிசு வழங்கினார்.
மே மாதம் ஒன்றாம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் நடைபெறவுள்ளது.
சென்னை கே.கே நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். காவல் துறை உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறது.
ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் 4ஆவது நாளாக வருமான வரி சோதனை தொடர்கிறது. தமிழ்நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் ஒரே நாளில் 9,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 57,410 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
சூடானில் இருந்து விமானத்தில் சென்னை திரும்பிய தமிழர்கள், மின்சாரம், உணவு, குடிநீர் இல்லாமல் சூடானில் சிரமப்பட்டோம் எனவும், சூடானில் இருந்து மீட்க உதவிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
சூடானில் இருந்து மீட்கப்பட்ட 9 தமிழர்கள் தமிழ்நாடு வந்தடைந்தனர்.டெல்லியில் இருந்து விமானம் மூலம் 4 பேர் மதுரைக்கும் 5 பேர் சென்னைக்கும் வந்தடைந்தனர்.
"எங்களுக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் எந்தத் தகராறும் இல்லை, அதிமுகவையும் பாஜகவையும் திட்டமிட்டு பிரிக்க நினைக்கின்றனர்" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்த நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
Background
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (ஏப்ரல்.27) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி இன்றோடு 341ஆவது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர் 5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -