இந்திய ரயில்வேயின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு போர்ட்டலான ஐஆர்சிடிசி இன்று காலை மீண்டும் முடங்கியது.


முடங்கிய ஐஆர்சிடிசி வலைதளம்: 


இந்திய ரயில்வேயின் ஆன்லைன் டிக்கெட் தளமான இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இன்று காலை முடங்கியது. இதனால் இந்த இணையதளத்தை,  வலைத்தளம் மற்றும் மொபைல் செயலியின் மூலம் பயன்படுத்த முடியவில்லை என்று பயணிகள் சமூக வலைதளங்களில் பேச தொடங்கினர்.  பராமரிப்பு பணிகள் காரணமாகவே இந்த தடை ஏற்பட்டுள்ளதாக ஐஆர்சிடிசி தெரிவித்தது


இதையும் படிங்க: மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?


கொந்தளித்த பயணிகள்: 


கிறிஸ்துமஸ் மற்றும் பள்ளி விடுமுறை காலம் என்பதால் பொதுமக்கள் வெளியூர்களுக்கு குடும்பத்துடன் செல்ல ரயில் பயணத்தை பெரிதும் விரும்புவார்கள். இந்த நிலையில் இன்று காலை தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரத்தில் தான் ஐஆர்சிடிசி இணையத்தளம் முடங்கியது. இதனால் டிக்கெட் முன்பதிவு செய்ய காத்திருந்த பயணிகள் விரக்தியடைந்தனர். இதனால் அவர்கள் உடனடியாக இது குறித்து தங்கள் சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிட தொடங்கினர். இது குறித்து பதிவு செய்த பயணிகள்,


"ஐஆர்சிடிசி சர்வர் இன்று காலை 11 மணிக்கு செயலிழந்தது, இது அடிக்கடி தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரத்தில் நடக்கிறது என்று பதிவிட்டிருந்தார்."






மற்றொரு பயணி பதிவிட்டுள்ளதாவது, “ஐஆர்சிடிசி செயலிழந்தது, இப்போது தட்கல் டிக்கெட்டுகளை எப்படி முன்பதிவு செய்வது என்பது பற்றி எந்த நேரமும் குறிப்பிடவில்லை, அதற்கான வழியைக் காட்ட முடியுமா அல்லது அந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாதவர்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்கப் போகிறீர்களா? என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வை டேக் செய்து கேட்டுள்ளார். 






இரண்டாவது முறை: 


இந்த மாதத்தில் ஐஆர்சிடிசி இணையத்தளம் இரண்டாவது முறையாக முடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இந்த போன்ற பிரச்னைகள் தொடர்ந்து நடைப்பெறுவதால் இணையத்தளத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்று மக்களின் கோரிக்கையாக உள்ளது.