ரூ.601க்கு 5G பரிசு வவுச்சரை முகேஷ் அம்பானி அறிமுகப்படுத்தியுள்ளார். நீங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு டேட்டாவை பரிசாக வழங்கலாம்.


ஜியோ ரூ.601 என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 12 மாதங்களுக்கு 5G டேட்டாவை எந்த வரம்புமின்றி பயன்படுத்த உதவுகிறது. மேலும் நீங்கள் அதை ஒருவருடன் பகிர்ந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதாவது, உங்கள் நண்பருக்கும் டேட்டாவை பரிசளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.


ரிலையன்ஸ் ஜியோவின் வரம்பற்ற 5G திட்டம் அனைவரும் விரும்பும் ஒன்றாகும். ஏனெனில் இது டேட்டா தீர்ந்துவிடும் என்ற கவலை இல்லாமல் அதிக வேகத்தில் ஸ்ட்ரீம் செய்யும் சுதந்திரத்தை உங்களுக்கு வழங்குகிறது. 


ஆனால் இதற்காக, நீங்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது 2 ஜிபி டேட்டா திட்டத்துடன் ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஜியோ தனது பயனர்களின் இந்தப் பிரச்சனையைப் புரிந்துகொண்டுள்ளது. அதனால்தான் 5G-ஐ மேலும் அணுகக்கூடியதாக மாற்ற வரம்பற்ற ஜியோ 5G வவுச்சர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 12 மாதங்களுக்கு வரம்பற்ற 5G டேட்டாவுடன் வருகிறது. சிறந்த அம்சம் என்னவென்றால், இந்த வவுச்சரை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் பரிசாக அளிக்கலாம்.



ரிலையன்ஸ் ஜியோவின் இந்த பரிசு வவுச்சர் திட்டத்தின் விலை ரூ.601. வாங்குபவர்கள் இதை MyJio செயலி மூலம் வாங்கலாம். வரம்பற்ற 5G வவுச்சரை செயல்படுத்த, பயனர்கள் ஒரு நாளைக்கு 1.5 GB முதல் 4 GB வரை டேட்டாவை வழங்கும் திட்டத்தை எடுக்க வேண்டும். நீங்கள் மாதாந்திர அல்லது மூன்று மாத திட்டத்தையும் எடுக்கலாம். ஒரு நாளைக்கு 1 GB டேட்டா திட்டத்தைத் நீங்கள் தேர்ந்தெடுத்திருந்தால் இந்த சேவையை பெற முடியாது. அதேபோல் ஜியோவின் ரூ.1,899 திட்டத்தைத் தேர்ந்தெடுத்த பயனர்களுக்கும் இந்த வவுச்சர் செல்லுபடியாகாது.


ஜியோ பயனர்கள் இதை தங்களுக்காகவோ அல்லது தங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருக்காகவோ வாங்கலாம்.  மேலும், MyJio செயலி மூலம் தங்கள் நண்பர்களுக்கு பரிசளிக்க முடியும். பயனர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், வவுச்சரை பரிசளிக்கும் முன், பெறுநர் தகுதியான திட்டத்தில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 


இந்த வவுச்சரை நீங்கள் செயல்படுத்தியதும், உங்களுக்கு தினமும் 3 ஜிபி, வரையறுக்கப்பட்ட 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற 5ஜி கிடைக்கும். வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் உங்கள் ரீசார்ஜ் திட்டத்தைப் போலவே இருக்கும். அதாவது, நீங்கள் 30 நாட்கள் ரீசார்ஜ் திட்டத்தை எடுத்திருந்தால், வவுச்சர் அந்த நாட்களுக்கு செல்லுபடியாகும்.


நீங்கள் ஒரு ஜியோ பயனராக இருந்தால், இந்த வவுச்சரை நீங்களே My Jio செயலியில் இருந்து வாங்கலாம். இந்த ரூ.601 வவுச்சர் திட்டத்துடன், ஜியோ ரூ.51, 101 மற்றும் 151 விலையில் குறுகிய கால 5G வவுச்சர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்கள் 1, 2 மற்றும் 3 மாதங்களுக்கு வரம்பற்ற 5G தரவையும் வழங்குகின்றன.