Breaking News TAMIL LIVE: பொய் சொல்வதில் இயந்திரத்துக்கு கூட வரம்பு உண்டு.. ஆனால் நரேந்திர மோடிக்கு வரம்பு இல்லை - ராகுல் காந்தி
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கீழதிருத்தங்கல் கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின்
இரங்கல் மற்றும் ஆறுதல்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழதிருத்தங்கல் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (9.5.2024) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்.
இலங்கை அதிபர் ரனில் விக்ரமசிங்கேவின் பதிவிக்காலம் இந்தாண்டுடன் முடியும் நிலையில், அதிபருக்கான தேர்தலானது வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி முதல் அக்டோபர் 16 வரை நடைபெற உள்ளதாக இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Breaking Tamil LIVE: ஜுன் 4 ஆம் தேதி, மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய பெலிக்ஸ் ஜெரால்ட் முன் பிணை கோரிய மனு விசாரணையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதில், “ யூ டியூப் சேனல்களை கட்டுப்படுத்த தகுந்த நேரமிது. யூ டியூப்பில் அவதூறான கருத்துக்களை தெரிவிக்க தூண்டுபவரை முதல் எதிரியாக சேர்க்க வேண்டும். பெலிக்ஸ் ஜெரால்டின் மனு மீது காவல்துறை ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளது.
நாய் கடியால் பாதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுமிக்கு ரேபிஸ் நோய் இருப்பதாக வரும் தகவல் பொய்யானது, தடுப்பூசி போடப்பட்டுள்ளது இன்று மதியம் அறுவை சிகிச்சை நடக்க வாய்ப்பு உள்ளது என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார்.
மோடி ஆட்சியின் கடைசி 3 ஆண்டுகளில் நாட்டு மக்களின் கடன் சுமை 14 லட்சம் மோடியாக உயர்ந்துள்ளதாக ஆய்வில் தகவல். 3 ஆண்டுக்கு முன் ரூ. 7 லட்சம் கோடியாக இருந்த நாட்டு மக்களின் மொத்த கடன் 2024ல் ரூ. 14 லட்சம் கோடியாக உயர்வு.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மூலம் 1,303 ஆதி திராவிட மகளிர், இளைஞர்கள் தொழில் முதலாளிகள் ஆகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் தொழில் முதலீட்டின் கீழ் 35% தொகையை அரசு மானியமாக வழங்குகிறது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் குறித்து இன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை 65 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மார்ச் 1 முதல் இன்று காலை வரை வழக்கமாக கோடை மழை 79.4 மி.மீ பதிவாகும் நிலையில் இன்று காலை வரை 27 மி.மீ பதிவாகியுள்ளது.
”பத்மநாபபுரம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., வேலாயுதம் அவர்களின் மறைவை அறிந்து, மிகுந்த வருத்தமுற்றேன். மாற்றுக் கொள்கைகள் கொண்டவராக இருந்தாலும், கட்சி வேறுபாடுகளின்றி அனைவரிடமும் பழகும் கொண்டவர் வேலாயுதம்” என முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்.
பாசனத்திற்காக நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மே 8 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை நீர் திறந்து விடப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொல்லிடம் (மயிலாடுதுறை மாவட்டம்) 7, குடிதாங்கி (கடலூர் மாவட்டம்), சத்தியார் (மதுரை மாவட்டம்) தலா 5, ஆழியார் (கோயம்புத்தூர் மாவட்டம்) 4, சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்), கிளென்மோர்கன் (நீலகிரி மாவட்டம்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்), பேரையூர் (மதுரை மாவட்டம்), வால்பாறை (கோவை மாவட்டம்), அண்ணாமலை நகர் (கடலூர் மாவட்டம்), வானமாதேவி (கடலூர் மாவட்டம்), மேல் கூடலூர், புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்), நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்), தொழுதூர் (கடலூர் மாவட்டம்) தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கில் யூட்யூபர் சவுக்கு சங்கர் நீதிமன்ற உத்தரவுப்படி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஊட்டியில் 126ஆவது மலர் கண்காட்சி நாளை தொடங்கி 20ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. அதேபோல் ரோஜா பூங்காவிலும் ரோஜா கண்காட்சி தொடங்க உள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஈடுசெய்யும் வகையில் வரும் 18ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு பணி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று பகல் 1 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு இந்த மழை தொடரும் என்றும், ஒரு சில மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவிலில் வழிபாட்டு உரிமையை மீட்டெடுக்க முயன்ற தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடைபெற்றதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிபாட்டு உரிமையை மீட்டெடுக்க வேண்டும், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், சேலம் மாவட்ட காவல்துறையை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
சென்னை ராயபுரம் அருகே இருசக்கர வாகன ஓட்டியின் கழுத்தில் கேபிள் வயர் சிக்கியது. நிலை தடுமாறி வாகன ஓட்டி கீழே விழ, இருசக்கர வாகனம் அரசு பேருந்து ஒன்றின் அடியில் சிக்கியது. அதிருஷ்டவசமாக விபத்தில் சிக்கியவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
வளர்ப்பு நாய்கள் பொதுமக்களை கடித்தால், உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். நாய் கடிப்பது, மாடுகள் முட்டுவது ஆகியவை தேசிய அளவிலான பிரச்னை. இதுதொடர்பாக தேசிய அளவிலான விவாதம் தேவை எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Background
தமிழகத்தை பொறுத்தவரையில், 3 ஆண்டுகளாக எந்த திட்டமும் இல்லை என கூறும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தி பார்ப்பதே கிடையாதா என திமுக கேள்வி எழுப்பியுள்ளது. கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி மேற்கோள் காட்டிய ஆவணங்கள் அனைத்தும் பொய் என தமிழ்நாடு காங்கிரஸ் அளித்த விளக்கங்களால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ் புதல்வன் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார். இதனிடையே, தமிழ்நாட்டில் 53,74,000 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக வேலைவாய்ப்புத்துறை தெரிவித்துள்ளது. கொளுத்தும் கோடை வெயிலுக்கு மத்தியில், தமிழ்நாட்டில் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி பெய்து வரும் கோடை மழையால் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2023- 2024ம் கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் சூழலில், உதகை மலர் கண்காட்சியை ஒட்டி நாளை நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் கவனத்தை திருப்பினா, தொடர்ந்து சர்ச்சைகுரிய கருத்துகளை கூறி வந்த காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடா, தனது பதவியை ராஜினாமா செய்தார். கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் ராய்கஞ்ச் வரை 2,870 கி.மீ. தொலைவை 60 மணிநேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றர். கர்நாடகாவில் பாலியல் வன்கொடுமை மற்றும் ஆள்கடத்தல் தொடர்பான வழக்கில் கைதான ரேவண்ணாவுக்கு வரும் 14 தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் ஊழியர்கள் சுமார் 300 பேர் திடீரென விடுப்பு எடுத்த விவகாரத்தில், 25 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச விவகாரங்களை அணுகினால், உக்ரைன் - ரஷ்யா மற்றும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காஸா ராஃபா படையெடுப்பு விவகாரத்தில் இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை அமெரிக்கா நிறுத்தியது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்ய செய்ய சதி திட்டம் தீட்டிய விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லாவோக் கடற்கரையில் அமெரிக்கா - பிலிப்பைன்ஸ் ராணுவத்தினர் இணைந்து கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பிரேசிலில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் செயல்படும் நீதிமன்றங்களை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்புகள் குவிய, கஞ்சாவை மீண்டும் சட்டவிரோத பட்டியலில் சேர்க்க தாய்லாந்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விளையாட்டுலகில் ஐபிஎல் போட்டிகள் ரசிகர்களை தொடர்ந்து சிறப்பான பொழுது போக்காக அமைந்துள்ளது. நேற்றைய லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது ஹைதராபாத் அணி, வெறும் 9.4 ஓவர்களில் 150 ரன்களுக்கும் அதிகமான இலக்கை எளிதில் சேஸ் செய்தது. தொடர்ந்து ஐபிஎல் 2024 இன்றைய போட்டியில் பெங்களூர் அணியை பஞ்சாப் கிங்ஸ் எதிர்கொள்கிறது. பெடரேஷன் கோப்பை தடகள போட்டியில் பங்கேற்கிறார் நீரஜ் சோப்ரா.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -