Breaking Tamil LIVE: மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை - ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம்!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு வழிநடத்திய வழக்கில் நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் அறிவித்தார்.
சென்னையில் 18 மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்களில் பயணிக்காமல் பார்க்கிங் மட்டும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மெட்ரோ நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதாவது, நந்தனம், திருவொற்றியூர், தேரடி, வண்ணார் பேட்டை, புது வண்ணார்பேட்டை, மண்ணடி, காலடிப்பேட்டை, உயர்நீதிமன்றம், அரசினர் தோட்டம், எல்.ஐ.சி, கிண்டி, ஆலந்தூர், நங்கநல்லூர், மீனம்பாக்கம், விமானநிலையம், அசோக்நகர், திருமங்கலம், எழும்பூர் உள்ளிட்ட 18 மெட்ரோ நிலையங்களில் பார்க்கிங் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த குறிப்பிட்ட மெட்ரோ நிலையங்களை தவிர்த்து மற்ற நிலைய பார்க்கிங் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 15 பேர் கொண்ட லிஸ்ட்டில் ரோகித் சர்மா கேப்டனாகவும் ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டனாகவும் செயல்பட உள்ளனர். மேலும், சஞ்சு சாம்சன், துபேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பண்ட், விராட்கோலி, சூரியகுமார் யாதவ், பும்ரா, முகமது சிராஜ், ஜெய்ஷ்வால், குல்தீப் யாதவ், சாஹல், ஜடேஜா, அக்ஷர் பட்டேல், அர்ஷிப்திங் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பறவைக் காய்ச்சல் எதிரொலியாக, தமிழ்நாடு-கேரள எல்லையில் சரக்கு வாகனங்கள் மீது மருந்துகள் தெளிக்கப்படுகின்றன
பாலியல் சர்ச்சையில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணா மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு இவ்வாரம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல். விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த புகழேந்தி உடல்நலக்குறைவால் கடந்த 6ம் தேதி உயிரிழந்தார். புகழேந்தி உயிரிழந்ததை அடுத்து கடந்த 8ம் தேதி விக்கரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
ராகுல் காந்தியோ, பிரியங்கா காந்தியோ போட்டியிடுவார்களா எனத் தெரியவில்லை. அவர்களுக்கு இருக்கும் குழப்பம், அவர்களின் தன்னம்பிக்கையின்மையை காட்டுகிறது - அமித்ஷா
ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் தொலைக்காட்சிதான் பழுதாகி உள்ளதாகவும், கேமரா காட்சிகள் அனைத்தும் பதிவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்வோருக்கு இ-பாஸ் தேவை என்பது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். இ-பாஸ் உத்தரவை மறுபரிசீலனை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 57% நீர் இருப்பு உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு வராது என்று குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
CM Stalin May Day Wishes : உழைப்பாளிகளின் குடும்பங்கள் மற்றும் பொருளாதாரம் உயர்ந்து உன்னத நிலை பெற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் மே தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
நிர்மலா தேவிக்கான தண்டனை விவகாரம் இன்று அறிவிக்கிறது ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம். கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்திய விவகாரத்தில் நிர்மலா தேவி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை மாவட்டம் சிக்காரம்பாளையத்தில் உருளை கிழங்கு சிப்ஸ் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. பராமரிப்பு பணியின் போது வாயு கசிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
மணிப்பூரில் வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட 9 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலே வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
Background
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே கடுமையான வானிலை நிலவுகிறது. வழக்கமாக மே மாதம் வரும் அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கரூர், ஈரோடு, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மண்டையை பிளக்கும் அளவு வெப்பநிலை பதிவாகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில மாவட்டங்களில் 43 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வட உள் தமிழக மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தால் கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறி வரத்தும் குறைந்து காணப்படுகிறது. இதனால் பீன்ஸ், கேரட் போன்ற காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.
வெப்பநிலை காரணமாக மக்கள் ஊட்டி கொடைக்கானலுக்கு படையெடுத்துள்ளனர். இதனால் வரும் மே 7 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் வரை கொடைக்கானல் மற்றும் ஊட்டி செல்லும் மக்களுக்கு இ-பாஸ் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கிடையில் கர்நாடகாவில் இரண்டாம் கட்ட தேர்தல் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது. வரும் 7 ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலுக்காக கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் என்னை விமர்சிக்கும் பிரதமர் கர்நாடகா மாநிலத்திற்உ என்ன செய்தார் என சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பினார். இந்நிலையில் நாட்டில் நடக்கும் முக்கிய விஷயங்களை உடனுக்குடன் காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -