Breaking News LIVE: சென்னையில் பலத்த காற்றுடன் மழை: சிரமத்தில் வாகன ஓட்டிகள்!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
Breaking News LIVE: சென்னையில் பலத்த காற்றுடன் மழை:
Breaking News LIVE: பண மோசடி வழக்கில் சிறைக்குச் சென்று ஜாமீனில் வெளியே வந்துள்ள ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்க உரிமை கோரினார்
முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவையடுத்து, நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மதியம், கோவை மேயர் கல்பனா ராஜினாமா செய்த நிலையில், நெல்லை மேயர் ராஜினாமா பேசு பொருளாகி உள்ளது.
Breaking News LIVE: பண மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ள ஹேமந்த் சோரன், மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Breaking News LIVE: திமுகவைச் சேர்ந்த கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரனிடம் மேயர் தரப்பினர் வழங்கினர்.
தற்போது காவல்துறை சரியாக செயல்படவில்லை. ஜெயலலிதா தமது ஆட்சி காலத்தில் மக்கள் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு கண்டார். தமிழகத்தில் நியாய விலை கடைகள் சரியாக செயல்படுவதில்லை. ஜெயலலிதா புகைப்படம் தற்போது எல்லோருக்கும் தேவைப்படுகிறது. அதற்கு அவர் ஆற்றிய பணிகளை காரணம் என சசிகலா தெரிவித்துள்ளார்.
Breaking News LIVE: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறையின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பார்படாஸில் இருந்து இந்திய அணி வீரர்கள் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள் நாளை காலை டெல்லி வருகின்றனர். அப்போது காலை 11 மணி அளவில் இந்திய பிரதமர் மோடியுடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் சந்திப்பு நடத்துகின்றனர்.
தொடர்ந்து அங்கிருந்து மும்பை செல்லும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் உலகக்கோப்பையுடன் மாலை வான்கடே மைதானத்தில் பேரணியாக வர திட்டமிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பரவி வருவதால் மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை கொடுத்துள்ளது. புனேவில் கர்ப்பினி பெண்கள் உட்பட மேலும் 7 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜிகா வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஏ.டி.எஸ் கொசுவால் ஜிகா வைரஸ் பரவுவதால் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகள் அனைத்தையும் கண்காணித்து போதிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
பார்படாஸில் இருந்து உலகக்கோப்பையுடன் இந்தியாவிற்கு புறப்பட்டனர் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்.
பிரதமர் மோடியின் உரையைத் தொடர்ந்து மாநிலங்களவையும் இன்று ஒத்திவைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தில் மெத்தனால் 8.6 சதவீதம் முதல் 29.7 சதவீதம் வரை கலந்துள்ளது என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வாரம் 4 நாட்கள் இயக்கப்பட்டு வரும் சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை ஜூலை 21ம் தேதி வரை நீட்டிப்பு - தெற்கு ரயில்வே அறிவிப்பு
கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மாநிலங்களவையில் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
"நீட் தேர்வுக்கு எதிராக ஒரு காலத்தில் திமுக மட்டுமே பேசிக் கொண்டிருந்தது. இன்று அனைத்துக் கட்சிகளும், ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்க்க ஆரம்பித்துள்ளது. நிச்சயமாக மாற்றம் வரும்" நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குப் பின், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி.
இந்திய அரசியலமைப்பு கலங்கரை விளக்கம் போன்றது என்று பிரதமர் மோடி மாநிலங்களவையில் பேசியுள்ளார்.
“கல்வியால் சிறந்தவர்களை ஒன்றுசேர்த்து நடத்தக்கூடிய இந்த நிகழ்ச்சிதான் புரட்சி; பாலினச் சமத்துவத்துக்கான சாட்சி இந்த மேடைதான்!” - விஜய்யின் கல்வி விருது விழா மேடையில் திருநங்கை அனுஸ்ரீ நெகிழ்ச்சி
நாகையில் 3-வது நாளாக வழக்கறிஞர்கள் போராட்டம்..
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், அதன் புரியாத சமஸ்கிருத தலைப்புத் திணிப்பை எதிர்த்தும் நாகை வழக்கறிஞர்கள் மூன்றாவது நாளாக போராட்டம். சட்டையில் கருப்புப் பட்டை உடன் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் நீதிமன்றப் பணிகள் பாதிப்பு.
பொதுச் சொத்தை சேதப்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை ரத்து செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
”தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் விலக்கை ஒன்றிய அரசு நீட் விலக்கு தர வேண்டும். இதற்கு தீர்வாக முதலில் கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும்” - விஜய்
”இடைக்கால தீர்வு வேண்டுமென்றால், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தி, சிறப்பு பொது பட்டியலை உருவாக்கி, அதில் கல்வி மற்றும் சுகாதராத்தை சேர்க்க வேண்டும்” - விஜய்
”மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருந்தாலும் அது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கு” - விஜய்
எதுவும் பேச வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால், நீட் பற்றி பேச வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டுதான் வந்தேன்
நீட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் - விஜய்
80 ஆயிரம் புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ். காலையிலே இந்திய பங்குச்சந்தை ஏறுமுகத்துடன் தொடங்கியிருப்பதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆளப்போறான் தமிழன் பாடல் ஒலிக்க நடிகர் விஜய் மேடையில் ஏறினார்.
காஞ்சிபுரம் பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்தை எதிர்த்தும் ஏகனாபுரம் கிராமத்திற்கு மக்கள் திட்டங்களை செயல்படுத்த கிராம சபையை ஏகனாபுரம் கிராமத்தில் நடக்காமல் புறக்கணித்த தமிழக அரசை கண்டித்து இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உண்ணாவிரதம் நடைபெற விமான நிலைய எதிர்ப்பு கூட்ட இயக்க நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டோர் ஏகனாபுரம் கிராமத்தில் இருந்து புறப்பட்டனர்
மாவட்ட ஆட்சியர் அலுவலக நோக்கி செல்ல முயன்ற 20க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.
உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது.
திருச்சியில் மளிகை கடை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது
திருவண்ணாமலை அரசு இசைப்பள்ளியில் கல்வி உதவித்தொகையுடன் மாணவர் சேர்க்கை துவக்கம்.
மூன்று ஆண்டுகள் பயிற்சி முடிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. சேர்க்கை கட்டணமாக முதலாம் ஆண்டிற்கு ரூபாய் 350, இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு கட்டணமாக ரூபாய் 325 மட்டும் செலுத்தப்பட வேண்டும். மாணவ மாணவியருக்கு இலவச பேருந்து பயணச்சலுகை மற்றும் மாதந்தோறும் ரூபாய் 400 அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை அளிக்கப்படுகிறது. இசைப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இசை ஆசிரியராக பணிபுரியவும் நாதஸ்வரம், தவில், தேவாரம் பயின்ற மாணவர்கள் திருக்கோயில்களில் பணிபுரியவும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக உப்பளங்கள் நீரில் மூழ்கின. இதனால், உப்பின் விலை உயர்ந்துள்ளது.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது
துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூபாய் 62 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Vehicle Number Plate : சென்னை: வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் போலீஸ், வழக்கறிஞர், ஊடகம் என ஸ்டிக்கர்கள் ஒட்டத் தடைவிதித்து சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கையை தமிழ்நாடு முழுதும் அமல்படுத்தக்கோரிய வழக்கு விசாரணையில் தமிழ்நாடு அரசு தகவல்.
நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க. இன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
Background
உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 116 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, இதுகுறித்து தலைமை மருத்துவ அதிகாரி ராஜ்குமார் அகர்வால் கூறுகையில், இதுவரை 27 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முதற்கட்ட தகவல்களின்படி, மக்கள் கூட்டம் அலைமோதியதால் நெரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது என்று சிக்கந்தரா ராவ் காவல் நிலைய எஸ்ஹோ ஆஷிஷ் குமார் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து பேசிய எட்டா எஸ்எஸ்பி ராஜேஷ் குமார் சிங், "எட்டா மருத்துவமனைக்கு இதுவரை 23 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட பல சடலங்கள் வந்துள்ளன. மேலும் காயம் அடைந்தவர் மருத்துவமனைக்கு இன்னும் வரவில்லை. உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஆன்மீக சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பின்னர், தரிசனம் முடிந்ததும் அனைவரும் கலைந்து செல்ல முற்பட்டனர். அப்போது, மக்கள் கூட்டம் அலைமோதியதால் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என திக்குமுக்காடினர்.
இந்த பிரார்த்தனை கூட்டத்தை மானவ் மங்கள் மிலன் சத்பவ்னா சமகம் கமிட்டி ஏற்பாடு செய்திருந்தது. இதில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் அறிந்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் முதல்வர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
முதல்வர் ஆதித்யநாத், இரண்டு மூத்த அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளருடன் காவல்துறை தலைமை இயக்குநரையும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தார்.
இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரிக்க ஆக்ரா கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் அலிகார் கமிஷனர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, "உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமான பக்தர்கள் உயிரிழந்த செய்தி நெஞ்சை பதற வைக்கிறது.
இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -