மேலும் அறிய
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
Breaking News LIVE, Sep 25: உள்ளூர் தொடங்கி உலக நாடுகள் வரையிலான முக்கிய நிகழ்வுகளின், உடனடி தகவல்களை நீங்கள் இங்கே அறியலாம்.
Key Events

ப்ரேக்கிங் செய்திகள்
Source : Special Arrangement - ABP Network
Background
- தமிழ்நாட்டிற்கான நிதியை கேட்டுப்பெற நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - பிரதமரை சந்தித்து பல்வேறு திட்டங்களுக்கான நிதியை கோர முடிவு
- சென்னை விமான நிலையத்தில் பிக்-அப் பாயிண்ட் மாற்றப்பட்டதால் கால்டாக்ஸி ஓட்டுனர்கள் பாதிப்பு - கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு
- யாரைக் கொல்லப்போகிறார்கள் என்று தெரியாமலேயே நாட்டு வெட்குண்டு தயாரித்து கொடுத்ததாக, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி அப்பு போலீசார்டம் வாக்குமூலம்
- ஆஸ்கருக்கு அனுப்ப 'லாபதா லேடீஸ்' திரைப்படத்தை தேர்வு செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
- மகாவிஷ்ணு விவகாரம் - தலைமை ஆசிரியர்கள் மீண்டும் சென்னைக்கு பணியிடமாற்றம்
- சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் வரும் 27ம் தேதி பதவியேற்கிறார்
- 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி
- ஜம்மு&காஷ்மீரில் இரண்டாம் கட்ட தேர்தல் - 26 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
- திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து விசாரிக்க குண்டூர் சரக டிஐஜி சர்வரேஸ்தா திரிபாதி தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது ஆந்திர அரசு
- லட்டு பிரசாதத்தில் புகையிலை பாக்கெட்டா? - திருப்பதி தேவஸ்தானம் திட்டவட்டமாக மறுப்பு
- மூடா நில முறைகேடு விவகாரம் - ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா விளக்கம்
- இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் அனுரா குமார திசநாயகே உத்தரவு - நவம்பர் 14ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு
- இலங்கையின் இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூரியா நியமனம்
- இஸ்ரேல் சரமாரியாக குண்டு வீசி தாக்குதலில் - லெபனானில் உயிரிழப்பு எண்ணிக்கை 569 ஆக உயர்வு
- இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் நிர்வாக கூட்டம் இன்று நடபெறுகிறது - ஐபிஎல் குறித்து ஆலோசனை?
- இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட அடுத்த மாதம் இந்தியா வருகிறது ஜெர்மன் ஆடவர் ஹாக்கி அணி
21:31 PM (IST) • 25 Sep 2024
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்#SenthilBalaji #SupremeCourtOfIndia pic.twitter.com/gGpaTYjTcW
— ABP Nadu (@abpnadu) September 25, 2024
19:19 PM (IST) • 25 Sep 2024
Breaking News LIVEஉளுந்தூர்பேட்டை அருகே நடந்த சாலை விபத்து -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதிஉதவி அறிவிப்பு
உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதிஉதவி அறிவிப்பு

Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















