CM Nitish Kumar: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கொரோனா தொற்றால் பாதிப்பு!
Bihar CM Nitish Kumar பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு (Nitish Kumar) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு (Nitish Kumar) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தில், கடந்த நான்கு நாட்களாக நிதிஷ் குமார் கடும் காயச்சலால் பாதிக்கப்பட்டு வந்ததாகவும், அவருக்கு இப்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bihar Chief Minister Nitish Kumar tests positive for #COVID19, he has been suffering from fever for the past four days.
— ANI (@ANI) July 26, 2022
(File photo) pic.twitter.com/EnNqsGVGWd
நிதிஷ்குமார் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர் என்பதும், இந்தாண்டு ஜனவரி மாதத்தில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நிதிஷ் குமார் குடியரசுத் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
श्रीमती द्रौपदी मुर्मू जी को भारत का राष्ट्रपति निर्वाचित होने पर माo मुख्यमंत्री ने हार्दिक बधाई एवं शुभकामनाएं दी है।@NitishKumar
— CMO Bihar (@officecmbihar) July 22, 2022
அவருக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நிதிஷ் குமார் விரைவில் குணமடைய வேண்டும் என்று பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
माननीय मुख्यमंत्री श्री नीतीश कुमार जी कोरोना पॉजिटिव हो गए हैं, डॉक्टरों ने उन्हें आराम करने की सलाह दी हैl pic.twitter.com/W0uTgpZif3
— Janata Dal (United) (@Jduonline) July 26, 2022
தற்போது நிதிஷ் குமார் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரை நன்றாக ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்
Chess Olympiad 2022 : கன்னியாகுமரி வந்தடைந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி..உற்சாக வரவேற்பளித்த வீரர்கள்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்