மேலும் அறிய

சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! தேவசம் போர்டு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சபரிமலையில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் (எல்.ஐ.சி.யுடன்) இணைந்து புதிய ஆயுள் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மண்டல பூஜை சீசன் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பக்தர்களுக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது திருவிதாங்கூர் தேவசம் போர்டு. நாளொன்றுக்கு 2 லட்சம் டின் அரவணை தயாரிப்பு, ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீடு எனப் பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளன.

சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! தேவசம் போர்டு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல கால யாத்திரை நவம்பர் 17-ம் தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி, பக்தர்களுக்குத் தேவையான அரவணை பிரசாதம் தட்டுப்பாடின்றிக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு (TDB) தலைவர் கே. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேவசம் போர்டு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது நாளொன்றுக்கு சுமார் 2 லட்சம் டின் அரவணை தயாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

மேலும், புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரவணை தயாரிப்பு மையம் நவம்பர் 3 அல்லது 4-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்தார். மண்டல கால யாத்திரையை முன்னிட்டு, 50 முதல் 60 லட்சம் டின் அரவணையை முன்கூட்டியே இருப்பு வைக்க தேவசம் போர்டு இலக்கு நிர்ணயித்துள்ளது.

சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! தேவசம் போர்டு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அரவணை தயாரிப்புப் பணிகள் தற்போது இரவு, பகல் என 24 மணி நேரமும் நடைபெற்று வருகின்றன. அரிசி மற்றும் வெல்லம் உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்படும் இந்தப் பிரசாதம், சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு எவ்விதத் தட்டுப்பாடுமின்றி கிடைக்க வேண்டும் என்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். இந்த ஆண்டு சபரிமலை யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்காக மற்றொரு முக்கிய அறிவிப்பையும் தேவசம் போர்டு வெளியிட்டுள்ளது.

மேலும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் (எல்.ஐ.சி.யுடன்) இணைந்து புதிய ஆயுள் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, யாத்திரைக் காலத்தில் சபரிமலையில் உயிரிழக்கும் பக்தர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இந்தக் காப்பீட்டுத் திட்டத்திற்கான முழு பிரீமியம் தொகையையும் தேவசம் போர்டே ஏற்கும் என அதன் தலைவர் கே. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்திற்கான பிரீமியம் தொகை தேவசம் போர்டின் நல நிதியில் இருந்து செலுத்தப்பட உள்ளது. நடப்பு யாத்திரைக் காலத்தில் இந்தக் காப்பீட்டுத் திட்டத்திற்காக சுமார் ரூ.1 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காகப் பக்தர்கள் தனியாக எந்தப் பிரீமியமும் செலுத்த வேண்டியதில்லை. ஆன்லைன் விர்ச்சுவல் கியூ முன்பதிவின்போது, பக்கதர்களின் பெயர் மற்றும் அவருடனான உறவு குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும்.

சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! தேவசம் போர்டு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சபரிமலை யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு இதுபோன்ற ஆயுள் காப்பீடு வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்றும் தேவசம் போர்டு தலைவர் குறிப்பிட்டுள்ளார். யாத்திரைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் மற்றும் பம்பை ஆகிய இடங்களில் வரவேற்பு மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

மேலும், சபரிமலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நவம்பர் 10-ம் தேதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரவணை தட்டுப்பாடின்றி கிடைக்க உற்பத்தி அதிகரிப்பு, பக்தர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு, அடிப்படை வசதிகள் மேம்பாடு என இந்த ஆண்டு சபரிமலை யாத்திரைக்காகப் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது திருவிதாங்கூர் தேவசம் போர்டு.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!
உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!
IBPS வேலைவாய்ப்பு 2026: மும்பையில் புதிய பணியிடங்கள்! விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
IBPS வேலைவாய்ப்பு 2026: மும்பையில் புதிய பணியிடங்கள்! விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!

Embed widget