மேலும் அறிய

Modi Cabinet Reshuffle: மத்திய அமைச்சரவையில் திடீர் மாற்றம்.. சட்ட அமைச்சராக அர்ஜூன் ராம் மேக்வால்!

சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு புவி அறிவியல் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.

சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு புவி அறிவியல் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். மத்திய சட்டத்துறை அமைச்சராக அர்ஜூன் ராம் மேக்வால் நியமிக்கப்பட்டுள்ளார். 

தற்போது சட்ட அமைச்சர் பதவியிலிருந்து புவி அறிவியல் அமைச்சராக நியமிக்கப்பட்ட கிரண் டிஜிஜூ அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் பிறந்தவர். கடந்த 2019 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அருணாச்சல மேற்கு மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

நீதித்துறையில் தலையிடுவதாக எழுந்த புகாரை அடுத்து சட்டத்துறை அமைச்சர் பதவியில் இருந்து கிரண் ரிஜிஜு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனைக்கு பின், அமைச்சரவை மாற்றத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த மாற்றம் குறித்து ஏபிபி செய்தி நிறுவனம் கிரண் ரிஜிஜூயை தொடர்பு கொண்டு பேசியது. அப்போது அவர், “ வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது” என தெரிவித்தார். 

ரவிசங்கர் பிரசாத்திடம் இருந்த சட்டத்துறை கடந்த 2021 ஜூலை மாதம் கிரண் ரிஜிஜூவிடம் வழங்கப்பட்டது. ரிஜிஜூ சட்ட அமைச்சராக இருந்த காலத்தில் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக நீதித்துறையுடன் அவருக்கு ஏற்பட்ட மோதல் அடிக்கடி தலைப்பு செய்திகளாக வெடித்தது. தொடர்ந்து, உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பு மீது பல்வேறு விமர்சனங்களை பகிரங்கமாக ரிஜிஜூ முன்வைத்தார். இதன் காரணமாகவே அரசின் மிக உயர்ந்த பதவியில் இருந்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மதிப்பு குறைவிலான புவி அறிவியல் அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். 

அர்ஜூன் ராம் மேக்வால்:

தற்போது சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜூன் ராம் மேக்வால் ராஜஸ்தானை சேர்ந்தவர். இவர் பாஜகவின் மிகப்பெரிய தலித் முகங்களில் இவரும் ஒருவர். மிகவும் எளிய முகமாக அறியப்படுகிறார். இவரது எளிமையை பிரதிபலிக்கும் விதமாக அடிக்கடி சைக்கிளிலும் வலம் வருவார். ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் இவருக்கு சட்ட அமைச்சகம் போன்ற முக்கிய அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது அரசியல் திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

ஐபோன் EMI பிரச்னை.. மலையில் இருந்து அப்பாவுடன் குதித்த இளைஞர்.. தாயும் தற்கொலை!
ஐபோன் EMI பிரச்னை.. மலையில் இருந்து அப்பாவுடன் குதித்த இளைஞர்.. தாயும் தற்கொலை!
சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு: ஓணம் தரிசனம் எப்போது?விவரம் இதோ..
சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு: ஓணம் தரிசனம் எப்போது?விவரம் இதோ..
ரூ 2,000க்கு மேல் UPI Payment செய்தால் கட்டணம்? விரைவில் வெளியாகும் புதிய அறிவிப்பு!
ரூ 2,000க்கு மேல் UPI Payment செய்தால் கட்டணம்? விரைவில் வெளியாகும் புதிய அறிவிப்பு!
செப்டம்பர் 1 முதல் கார் விலை உயர்வு! டாடா, ஹூண்டாய் கார்கள் வாங்க இதுவே கடைசி வாய்ப்பு!
செப்டம்பர் 1 முதல் கார் விலை உயர்வு! டாடா, ஹூண்டாய் கார்கள் வாங்க இதுவே கடைசி வாய்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Report: 10 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை; இன்றைய வானிலை நிலவரம் இதோ
10 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை; இன்றைய வானிலை நிலவரம் இதோ
Pete Hegseth: பதவி விலகும் அமெரிக்க ராணுவ செயலாளர்.? டென்ஷனில் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்; காரணம் என்ன.?
பதவி விலகும் அமெரிக்க ராணுவ செயலாளர்.? டென்ஷனில் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்; காரணம் என்ன.?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Ather Rizta Record Sales: ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
Embed widget