மேலும் அறிய

PAN Aadhaar Linking: ஆதார் கார்டை இணைக்காவிட்டால் பான்கார்டு செல்லாது..! எப்படி இணைக்க வேண்டும்..?

PAN Aadhaar Linking: பான் கார்டை ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

பான் கார்டுடன் (PAN (Permanent Account Number) ஆதார் எண்ணை(Aadhaar) குறிப்பிட்ட காலத்திற்குள் இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செயல்படாது என்று இந்திய வருமான வரித்துறை (The Income Tax (I-T) Department) அறிவித்துள்ளது. 

வரி செலுத்துபவர்கள் பான் கார்டை அதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் அடுத்தாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பான் கார்டு செயலிழக்கும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. 

1961- ஆம் ஆண்டின் வருமான வரி சட்டத்தின்படி, பான் கார்டு வைத்திருப்பவர்கள் ஆதார் எண்- பான் லிங்க் செய்யவேண்டியது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க அடுத்தாண்டு (2023) மார்ச் 31-ஆம் தேதி கடைசி நாளாகும்.

PAN Aadhaar Linking: ஆதார் கார்டை இணைக்காவிட்டால் பான்கார்டு செல்லாது..! எப்படி இணைக்க வேண்டும்..?

பான் - ஆதார் இணைப்பு:

வருமான வரி செலுத்துவோர் பான்கார்டு, ஆதார் கார்டை இணைத்தால் இ-ரிட்டனை விரைவாக பரிசோதிக்க உதவும். பான் கார்டு என்பது தனிமனிதனின் பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கவும் நிதி மோசடிகளைத் தடுக்கவும் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும். இதை வெறும் அடையாள அட்டையாக மட்டும் நினைக்கக் கூடாது.

பெரிய அளவில் பணப் பரிவர்த்தனை செய்யும் போதோ, நகை வாங்கும்போதோ பான் கார்டு விவரங்கள் வழங்கப்பட வேண்டும். PAN எண்ணை உங்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்பது சில மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இணைக்க வேண்டும் என்பது நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது பான் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, மார்ச் 31, 2023 வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

பான் கார்டு - ஆதார் எண்:

அதற்குள் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், ஏப்ரல் 1, 2023 முதல் உங்கள் பான் கார்டு செயலிழக்கப்பட்டுவிடும். இணைக்கப்படாத அனைத்து பான் கார்டுகளும் செல்லாத பான் கார்டாக அறிவிக்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.  மார்ச் 31, 2023 க்குள் ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைக்கவில்லை என்றால், வருமான வரிச் சட்டத்தின் புதிய விதிகள் 234H பிரிவின் படி நீங்கள் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

வங்கிக்கணக்கு திறக்க, பங்கு பரிவர்த்தனைகள், குறிப்பிட்ட தொகைக்கும் அதிகமாக டெபாசிட் செய்யும் போது, ரொக்கப் பரிவர்த்தனைகள், வீடு பதிவு செய்வது, விற்பனை செய்வது ஆகியவற்றின் போது பான் எண் கட்டாயம் தேவை. பான் எண் தேவைப்படும்போது, செயலிழந்த பான் எண்ணை உயயோகிக்க முடியாது இல்லையா? அதனால், குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்து விடுங்கள்.

போலியான பான் கார்டுகள் பயன்பாட்டை தடுக்க, ஆதார் எண்ணுடன் இணைக்கும் திட்டத்தை வருமான வரித்துறை அறிமுகம் செய்தது.

PAN Aadhaar Linking: ஆதார் கார்டை இணைக்காவிட்டால் பான்கார்டு செல்லாது..! எப்படி இணைக்க வேண்டும்..?

இணைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

  • ஆதார் பான இணைப்புக்கு முதலில் www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்
  • அந்த இணையதளத்தில் Link Aadhaar என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
  • இணையதளப் பக்கத்தில் பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) பதிவு செய்ய வேண்டும்.
  • ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், அதற்குரிய விவரத்தில் டிக் செய்ய வேண்டும்.
  • விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்கும் பாக்ஸில் டிக் செய்ய வேண்டும்
  • இணையத்தில் வரும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து கிளிக் செய்தால் இணைக்கப்பட்ட விவரம் தெரியவரும்.

பான்-ஆதார் இணைக்கப்பட்டதா என பரிசோதிப்பது எப்படி?

  • www.pan.utiitsl.com/panaadhaarlink/forms/pan.html/panaadhaar என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும்
  • அதில் பான் எண், பிறந்ததேதி, குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்ய வேண்டும்
  • இறுதியாக சப்மிட் பட்டனை கிளிக் செய்தால், இணைப்புகுறித்த செய்தி வரும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget