Air India Bomb Threat: ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசரமாக திருவனந்தபுரத்தில் தரையிறக்கம்..!
Air India Bomb Threat: ஏர் இந்தியா 657 விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அவசரமாக திருவனந்தபுரத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவித்துள்ளன
மும்பையில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அவசரமாக திருவனந்தபுரத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kerala | Air India flight 657 landed at Thiruvananthapuram Airport. A full emergency declared after a bomb threat was received. The flight in the isolation bay. Passengers to be evacuated soon: Thiruvananthapuram Airport
— ANI (@ANI) August 22, 2024
More details awaited
இந்நிலையில் விமானமானது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்று திருவனந்தபுரம் விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஏ.என்.ஏ செய்தி முகமை தெரிவித்திருந்தது.
இன்று, மும்பையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ஏர் இந்தியா 657 என்ற விமானமானது புறப்பட்டது. அப்போது, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. இந்தில் 135 பயணிகள் பயணித்ததாகவும் தகவல் வெளியானது.
இதையடுத்து, தற்போது திருவனந்தபுரத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விமானமானது, தனிமைப்படுத்தப்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் , மோப்ப நாய் உதவியுடன் , பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
Also Read: TVK Flag: த.வெ.க கொடி, பாடலை வெளியிட்டார் விஜய்: எப்படி இருக்கு? அர்த்தம் என்ன தெரியுமா?