தமிழ்நாடு: 



  • கொரோனா காரணமாக கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள், தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது நேரடித் தேர்வு அறிவிக்கப்பட்டதை எதிர்த்து அறவழியில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மாணவர்களை அழைத்துப் பேசாமல் அவர்கள் மீது வழக்குகள் போட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்ற மாணவ மாணவியரை அழைத்து பேசி இந்த ஆண்டிற்கான பருவமுறை தேர்வினை ஆன்லைன் மூலமாக நடத்தவும், நேரடி வகுப்புகள் முழுமையாக ஆரம்பித்த பிறகு நேரடி தேர்வுகள் நடத்தவும், மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறவும் நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

  • நாளை நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடுஅரசின் அமைச்சரவைக்கூட்டம் மழை காரணமாக சனிக்கிழமை மாலை நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  • பத்தாவது மெகா தடுப்பூசி முகாம் திட்டமிட்டப்படி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று தமிநாடு சுகாதாரத்துறை  அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   



 


இந்தியா:



  • கிரிப்டோ கரன்சி விஷயத்தில் அனைத்து ஜனநாயக நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது முக்கியம் என்றும், இது நமது இளைஞர்களை பாழாக்குவோரின் தவறான கைகளுக்கு சென்றுவிடாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி  சிட்னி பேச்சுவார்த்தையின் தொடக்க நிகழ்வில் பேசினார். 

  • ஆடைக்கு மேல் தொடுவது போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் வராது என்று மும்பை உயர்நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்ப்பை இந்திய உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. உடல்ரீதியான தொடர்பு இல்லாதவரை அது போக்ஸோ சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படாது என்று மும்பை உயர் நீதிமன்றம் முன்னதாக தீர்ப்பு வழங்கியிருந்தது. 

  • கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 11,919 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,28,762 ஆக குறைந்துள்ளது. 


சினிமா:



  • நயன்தாரா நடிக்கும் அடுத்தப் படத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குநர் அஷ்வின் சரவணன் இயக்கும் 'கனெக்ட்'(Connect) என்ற படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான 'மாயா' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.  

  • வன்னியர் சமுதாயத்தை இழிவுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட ஜெய் பீம் திரைப்படம்  எந்த அங்கீகாரத்திற்கும் பாராட்டுக்கும் தகுதியானதல்ல. எனவே "ஜெய் பீம்" திரைப்படத்திற்கு எந்த ஒரு விருதோ, அங்கீகாரமோ, பாராட்டோ வழங்க வேண்டாம் என வன்னியர் சங்கம் சார்பாக  வன்னியர் சங்கம் சார்பாக பாமகவை சேர்ந்த வழக்கறிஞர் பாலு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை மற்றும் மாநில தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்

  • 52-வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆண்டிற்கான சத்யஜித்ரே வாழ் நாள் சாதனையாளர் விருது ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் ]MartinScorsese க்கும் ஹங்கேரிய திரைப்பட தயாரிப்பாளர் stevanSzabo க்கும்  வழங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் டாக்கூர் அறிவித்துள்ளார்.


விளையாட்டு: 



தொழிநுட்பம்: 



குற்றம்: 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண