லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துவருகிறார். இதனையடுத்து அவர் அட்லீ - ஷாருக்கான் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.


சூழல் இப்படி இருக்க நயன் இன்று தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவரது பிறந்தநாளை விக்னேஷ் சிவன் கேக் வெட்டியும், வான வேடிக்கை நிகழ்த்தியும் கொண்டாடி அசத்தினார். அதுமட்டுமின்றி நயனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த படம் தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்படும் என விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தார்.


 






இந்நிலையில் நயன்தாரா நடிக்கும் அடுத்தப் படத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குநர் அஷ்வின் சரவணன் இயக்கும் 'கனெக்ட்'(Connect) என்ற படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான 'மாயா' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. 


 






'கனெக்ட்' படத்தில் அனுபம் கேர், ஹனியா நபிஷா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் இணைந்து நடத்தும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. 


நயன்தாரா பிறந்தநாளையொட்டி கனெக்ட் படத்தின் போஸ்டர்களும் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது அந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண