கூகுள் தனது பணப் பரிமாற்றத்துக்கான அப்ளிகேஷனான கூகுள் பேயில் புதிய அப்டேட்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி கூகுள்பேயில் தற்போது ஹிங்கிலீஷ் (இந்தி+இங்கிலீஷ்) மொழி அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் பணப்பரிமாற்றம் இன்னும் எளிமையாக மாற்றப்பட்டுள்ளது.இந்தியா மெட்ரோக்களில் உள்ள பெரும்பாலான மக்கள் இங்கிலீஷில் பேசுவதை விட இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கலந்து பேசுவதைப் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளனர். இதனாலேயே இந்த ஹிங்கிலீஷ் தற்போது கூகுள்பேயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பட்ட மக்களும் இந்த அப்ளிகேஷனை உபயோகிப்பது அதிகரிக்கும்.






இதுதவிர கூகுள் பேயில் குரூப்கள் உருவாக்கப்படும் என கடந்த ஆண்டே கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது. அதோடு தற்போது கூடுதலாக பில் ஸ்ப்ளிட் என்கிற ஆப்ஷனையும் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. 










இந்த ஆப்ஷன் என்ன செய்யும்?


ஒருவேளை நீங்கள் ஓட்டலில் உங்கள் நண்பர்களுடன் உணவு அருந்துகிறீர்கள் என்றால், பில் செலுத்தும்போது இந்த பில் ஸ்பிள்ட் என்னும் ஆப்ஷனை உபயோகிக்கும்போது தானாகவே அவரவர் பங்கினை இதில் பிரித்து தனித்தனியாக பில் செலுத்துவதற்கு இது உதவும். 


இது இல்லாமல் கூடுதலாக தனது தேடல் எஞ்சினிலும் சில ஆப்ஷன்களை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் நாம் தேடும் தகவலை ஆடியோவாகவும் தற்போது கேட்கமுடியும். அதற்கான பட்டனை எனேபிள் செய்தாலே இதற்குப் போதுமானது. இந்த புதிய அப்டேட்கள் 2022க்குள் அறிமுகப்படுத்தப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.