புதிய ஸ்கோடா ஸ்லேவியா மாடல் ஹோண்டா சிட்டி, மாருதி சுசுகி சியாஸ் மற்றும் ஹூண்டாய் வெர்னா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. ஸ்கோடா ஸ்லேவியா மாடல் வோக்ஸ்வேகன் குழுமத்தின் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் அறிமுகமாகும் இரண்டாவது கார் ஆகும்.
ஸ்கோடா ஸ்லேவியா மாடல் வோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB-A0-IN இயங்குதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா ஸ்லேவியா மாடல் காரில் 113 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 1 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜின் அல்லது 150 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இந்தக் காரானது நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என ஸ்கோடா நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று ஸ்கோடா ஸ்லேவியா காருக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. மேலும் புதிய ஸ்கோடா ஸ்லாவியாவிற்கான டெலிவரிகள் 2022 முதல் தொடங்க இருக்கின்றன. இந்தக் கார் ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் என 3 வகைகளில் வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி, ஸ்கோடா ஸ்லேவியா கார்கள் Tornado Red, Candy White, Crystal Blue, Brilliant Silver, and Carbon Steel ஆகிய 5 வண்ணங்களில் தயார் செய்யப்பட்டுள்ளன.
கூபே போன்ற கூரையுடன் அமைந்திருக்கும் இந்தக் காரின் அளவானது 4,541 மிமீ, அகலம் 1,752 மிமீ, உயரம் 1,487 மிமீ மற்றும் 2,651 மிமீ வீல்பேஸுடன் தயாராகியுளது.
மேலும் மிக நீளமான வீல்பேஸைக் கொண்டுள்ள இந்த கார் முதல் தலைமுறை ஆக்டேவியா செடானைவிட பெரியது என்று ஸ்கோடா நிறுவனம் கூறுகிறது.
இந்தக் காரில் செங்குத்து ஸ்லேட்டுகள் மற்றும் தடிமனான குரோம் பார்டர்கள் கொண்ட சிக்னேச்சர் பட்டர்ஃபிளை கிரில், LED DRLகளுடன் கூடிய நேர்த்தியான LED விளக்குகள் மற்றும்16-இன்ச் அலாய் வீல்கள் ஆகியவையும் அடங்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Paytm Shares Crash: ஏமாற்றம் அளித்த பேடிஎம் பங்கு விற்பனை - காரணம் என்ன?
Petrol, Diesel Price : பெட்ரோல் விலை நிலவரம் இதுதான்.. மழை நேரத்தில் இதை முதலில் தெரிஞ்சுகோங்க
E Bay | 786 எண்கொண்ட ரூபாய் நோட்டு உங்கக்கிட்ட இருக்கா.. அப்ப நீங்க லட்சாதிபதி.. எப்படி தெரியுமா?
Car loan Information:
Calculate Car Loan EMI