மேலும் அறிய
7 AM Headlines: காலை 7 மணி செய்திகள்.. நடந்தவை, நடக்கவிருப்பவை எல்லாம் உங்களுக்காக..!
7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- அதிகனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு; நிவாரண உதவிகளையும் வழங்க இருக்கிறார்.
- சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தையும் நேரடி ஒளிபரப்பு செய்வது சட்டப்படி கட்டாயம் அல்ல - உயர்நீதிமன்றம் கருத்து
- வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கு - அமைச்சர் பொன்முடிக்கு தண்டனை இன்று அறிவிப்பு
- தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
- கனமழை எதிரொலி: திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது - போக்குவரத்து துறை தகவல்
- வரும் 26 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் எம்.பி ரவிக்குமார் வலியுறுத்தல்
- வெள்ள பாதிப்பில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 3 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டார்.
- பொதுத் தேர்வு பாடத் திட்டங்கள் நிறைவு பெறாமல் இருந்தால் சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இந்தியா:
- 97 எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் 3 குற்றவியல் மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றம்
- வழக்குகளை விசாரிக்க சிபிஐக்கான பொது ஒப்புதலை 10 மாநிலங்கள் திரும்ப பெற்றன - மத்திய அரசு தகவல்
- நாடு முழுவதும் புது ஜேஎன் 1 வகை கொரோனா தொற்றால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- வெள்ள நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது - திமுக எம்.பி. திருச்சி சிவா குற்றச்சாட்டு
- "மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து அளிக்கப்படும்" - இஸ்ரேல் பிரதமருக்கு இந்திய பிரதமர் மோடி உறுதி
- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 341 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
- மக்களவை தேர்தல் தொடர்பாக மூத்த தலைவர்களுடன் மல்லிகார்ஜூன கார்கே இன்று ஆலோசனை
- கடலோர காவல்படைக்கு ரோந்து கப்பல்கள் வாங்க ரூ.1,614 கோடிக்கு மத்திய அரசு ஒப்பந்தம்
உலகம்:
- இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது - ஹமாஸ் தகவல்.
- சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது.
- பாகிஸ்தானின் பொருளாதாரம் சீரழிய இந்தியா காரணம் அல்ல - நவாஸ் ஷெரிப்.
- ட்ரம்ப் போட்டியில் இல்லை என்றால் நானும் விலகுவேன் - விவேக் ராமசாமி.
- நாடாளுமன்றத்தில் வன்முறை தூண்டிய விவகாரம்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ட்ரம்ப் தகுதி நீக்கம்
- காஸா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்: 28 பேர் உயிரிழப்பு
விளையாட்டு:
- தென்னாப்பிரிக்கா இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இன்று மோதல்.
- இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் டெஸ்ட் இன்று தொடக்கம்.
- தென்னாப்பிரிக்கா இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இன்று மோதல். இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் டெஸ்ட் இன்று தொடக்கம். கிரிக்கெட் வீரர் முகமது ஷமி உள்பட 26 பேருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிப்பு
- ஐசிசி 20 ஓவர் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion