மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: நிலநடுக்கத்தால் அடுத்தடுத்து ஆட்டம் காணும் நாடுகள்.. பதற்றத்தில் உலகம்.. காலை 7 மணி தலைப்பு செய்திகள்!
7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- திருச்சி விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.20,140 கோடியில் புதிய திட்டங்கள்; பிரதமர் மோடி திறந்து வைக்க, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உடன் இருந்தனர்.
- கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பொங்கலுக்குள் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும் - அமைச்சர் சேகர்பாபு தகவல்
- தமிழ்நாட்டில் நடைபெறும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி குறித்து பிரதமர் மோடியிடம் ஓ.பன்னீர்செல்வம் புகார்
- தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்; நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை விவரம் - 17 காவல்துறை அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை - தமிழ்நாடு அரசு தகவல்
- ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்தது தமிழ்நாடு அரசு
- மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற வேண்டும். சென்னை மெட்ரோ இரண்டாவது கட்ட திட்டத்துக்கான மத்திய அரசின் நிதியை விடுவிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
- ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாகிகள் முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி, ரஜினிகாந்த் ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியுள்ளனர்.
- எண்ணூர் பகுதியில் அமோனியா கசிவு விவகாரம்; யார் காரணமாக இருந்தாலும் கடும் நடவடிக்கை - தேசிய பசுமை தீர்ப்பாயம் உறுதி
இந்தியா:
- பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டிரக் ஓட்டுநர்கள் போராட்டம் மத்திய அரசின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதால் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
- பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் முழுதும் பொதுத்தளத்தில் வெளியிட வேண்டும் - உச்ச நீதிமன்றம்
- சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அங்கேயே ஸ்பாட் புக்கிங் செய்து தரிசனம் செய்வது ஜனவரி 10ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
- ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி நிறுவனரும், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகனின் தங்கையுமான ஒய்.எஸ். ஷர்மிளா, தனது கட்சியை காங்கிரசுடன் இணைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- அயோத்தி ராமர் கோயிலின் கருவறையில் பிரதிஷ்டை செய்ய, மைசூரைச் சேர்ந்த சிற்பியின் சிலை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- ரயில் விபத்துகளை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன..?மத்திய அரசு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
- அமலாக்கத்துறை சம்மன் எதிரொலி; ஜார்க்கண்ட் முதலமைச்சர் ராஜினாமா..? இன்று ஆளும்கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம்
உலகம்:
- ஜப்பானை தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு முறை ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- லெபனானில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஹமாஸ் துணைத் தலைவர் உயிரிழந்ததாக தகவல்.
- ஜப்பான் விமான நிலையத்தில் தீப்பற்றிய விமானம்: 5 பேர் உயிரிழப்பு என தகவல்.
- ஜப்பான் நிலநடுக்கம் - உயிரிழப்பு எண்ணிக்கை 48 ஆக உயர்வு
விளையாட்டு:
- டெஸ்ட் தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்தியா ..? - 2வது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியுடன் இன்று மோதல்.
- கடைசி டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்.
- இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றிபெற்றது.
- ப்ரோ கபடி லீக்: ஹரியானா ஸ்டீலர்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் இன்று மோதல்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
திரை விமர்சனம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion