![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
4 ஆண்டுகளுக்கு முன் மிரட்டினார்... ஜாவித் அக்தர் மீது கங்கனா வழக்கு!
3 அல்லது 4 ஆண்டுகள் முன் கங்கனா ரனாவத் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் ஜாவித் அக்தர் இல்லத்துக்கு அழைக்கப்பட்டு உள்ளனர் . அங்கு இருவரையும் ஜாவித் அக்தர் மிரட்டியுள்ளார்.
![4 ஆண்டுகளுக்கு முன் மிரட்டினார்... ஜாவித் அக்தர் மீது கங்கனா வழக்கு! 4 years ago Javed Akhtar took me home and threatened -Kangana Ranaut filed a case 4 ஆண்டுகளுக்கு முன் மிரட்டினார்... ஜாவித் அக்தர் மீது கங்கனா வழக்கு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/21/9176feab4a659554ed78ab8d720e4bdc_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தொடர்பான தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் தலைவி, தாம் தூம் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவாத் தனது பெயரை பயன்படுத்தி அவதூறு பரப்பியதாக பிரபல எழுத்தாளர் ஜாவித் அக்தர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
அந்தேரி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக பல முறை சம்மன் அனுப்பியும் கங்கனா ரனாவத் காலம் தாழ்த்தி வந்தார். கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜராகக் கோரி மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பினார். நீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்தார் மாஜிஸ்திரேட். ஆனால், தனக்கு கொரொனா அறிகுறி இருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது எனா அவர் தெரிவித்தார். இதனை அடுத்து கடந்த 14 ம் தேதி நடந்த வழக்கு விசாரணையின் போது கங்கனா ரனாவத் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு பெற்றார்.
இந்த நிலையில், தான் தன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த எழுத்தாளர் ஜாவித் அக்தர் மீது எதிர் வழக்கு தொடர்ந்து இருக்கிறார் கங்கனா ரனாவத். ஜாவின் அக்தர் பணம் பறிக்கும் நோக்கத்தில் தன்னிடம் மிரட்டியதாக கங்கனா ரனாவத் தெரிவித்து இருக்கிறார். அதுபோல் ஜாவித் அக்தரின் வழக்கை விசாரித்து வரும் மாஜிஸ்திரேட் மீது தனக்கு நம்பிக்கை இல்லாததால் அவரையும் மாற்ற வேண்டும் எனவும், அல்லது வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கங்கனா ரனாவத் கோரி இருக்கிறார்.
இந்த வழக்கு விசாரணைக்காக ஜாவித் அக்தரும், கங்கனா ரனாவத்தும் மும்பை நீதிமன்றத்தில் ஆஜராகினர். கங்கனாவுக்கு மத்திய ரிசர்வ் காவல் படை பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அந்த வீரர்களுடன் நீதிமன்றம் வந்தார் கங்கனா. இருதரப்பு வாதங்களை கேட்ட மும்பை நீதிபதி, மாஜிஸ்திரேட்டின் வழக்கு விசாரணையில் எந்த தவறும் நடைபெறவில்லை எனக்கூறிய கங்கனாவின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். முன்னதாக ஜாவித் அக்தரும் மனுவை தள்ளுபடி செய்யக்கோரிய கங்கனாவின் வழக்கையும் மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
கங்கனாவின் மனு குறித்து பேசிய அவரது வழக்கறிஞர் சித்திக், ”கங்கனா ரனாவத் ஜாவித் அக்தர் மீது அளித்துள்ள புகார் புதிய நிகழ்வு அல்ல. 3 அல்லது 4 ஆண்டுகள் முன் கங்கனா ரனாவத் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் ஜாவித் அக்தர் இல்லத்துக்கு அழைக்கப்பட்டு உள்ளனர் . அங்கு இருவரையும் ஜாவித் அக்தர் மிரட்டியுள்ளார். இதை பல முறை அவர் தெரிவித்து இருக்கிறார். இருந்தாலும் ஜாவித் அக்தரின் வயதை கருத்தில் கொண்டு புகாரளிக்கவில்லை. ஆனால், இப்போது இந்த வழக்கில் அவர் தீவிரமாக இறங்கி இருக்கிறார். அவருக்கு குடும்பத்தினரும் உறுதுணையாக உள்ளனர்.” என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)