மேலும் அறிய

37 வயசு, விவாகரத்து ஆகிடுச்சு..! “30 வயசுக்குள்ள வெர்ஜின் பிராமின் பார்ட்னர் தான் வேணும்” நெட்டிசன்கள் ஷாக்

MatchMaker: விவாகரத்தான 37 வயது நபர் தனக்கு 30 வயதுக்குள் வெர்ஜின் பிராமின் மணப்பெண் தேவை என கூறியிருப்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

MatchMaker: விவாகரத்தான 37 வயது முன்னாள் ஐஐடி மாணவரின் மணப்பெண் தொடர்பான கோரிக்கை கடுமையான எதிஎவினைகளை எதிர்கொண்டு வருகிறது.

பிராமின் வெர்ஜின் மணப்பெண் தேவை

திருமண தரகரும், டேட்டிங் பயிற்சியாளருமான ஓண்ட்ரில்லா கபூர், திருமணம் ஆகாத மணமகளை தேடும் 37 வயதான விவாகரத்தான முன்னாள் ஐஐடி மாணவரின் கோரிக்கையை வெளிப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி பேசுபொருளாக மாறியுள்ளது.  அந்த நபர் தனக்கு விவாகரத்தாகி இருந்தாலும், தான் மறுமணம் செய்துகொள்ள விரும்பும் பெண் “30 வயதுக்குட்பட்ட, பிராமண சமூகத்தைச் சேர்ந்த, இதுவரை எந்தவொரு நபருடனும் உறவில் இருந்திடாத, வெர்ஜின் மணப்பெண் தேவை” என வற்புறுத்தியதா ஓண்ட்ரில்லா தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த மணமகனின் குறுகலான பார்வை மற்றும் சாதி பற்றை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.

மணமகனின் கோரிக்கை..

ஓண்ட்ரில்லா பேசி வெளியிட்டுள்ள வீடியோவின்படி, ஐஐடியில் படித்துவிட்டு பில்லியன் டாலர் நிறுவனத்தில் இயக்குனராக பணிபுரிவதாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த நபர், தனக்கான மணமகள் எப்படி இருக்க வேண்டும் என நிபந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளார். இதில் உள்ள நடைமுறை சிக்கல் மற்றும் நியாயம் குறித்து ஓண்ட்ரில்லா கேள்வி எழுப்பியபோது, அதற்கெல்லாம் ஒரு காரணம் இருப்பதாகவும், மேற்சொன்ன நிபந்தனைகளின்படி தனக்கு ஒரு வரன் வேண்டும் எனவும் தீவிரமாக பேசியுள்ளார். 

காரணங்களை அடுக்கிய மணமகன்

வீடியோவில் கூறியிருப்பதன்படி, “ஏற்கனவே வேறு ஒருவருடன் உறவில் இருந்த பெண்கள் துரோகம் செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. சில ஆய்வுகளின் முடிவுகள் கூட இதையே தெரிவிக்கின்றன” என அந்த மணமகன் பேசியுள்ளார். இதையடுத்து விவாகரத்தான எனக்கும் இதே ஒப்பீடு பொருந்துமா என ஓண்ட்ரில்ல கேட்டாபோது, ”இல்லை, அது ஒரு நியாயமான ஒப்பீடு இல்லை. ஏனென்றால் நான் ஒரு ஆண்” என அந்த முன்னாள் ஐஐடி மாணவன் பதிலளித்துள்ளார். இன்றைய சூழலில் நீங்கள் எதிர்பார்ப்பதை போன்று பெண்கள் கிடைப்பது எளிதல்ல, அப்படியே கிடைத்தாலும் மிகவும் பழமைவாதத்தை பின்பற்றுபவர்களாகவே இருப்பார்கள், அவர்களும் 37 வயதான விவாகரத்தான நபரை திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்றும் ஓண்ட்ரில்லா தெரிவித்துள்ளார். அதற்கு குறிப்பிட்ட தனியார் செயலியில் தனக்கு ஏராளமான பெண்கள்  விருப்பம் தெரிவித்தாலும், மோசடி அச்சத்தின் காரணமாக அவற்றை தான் பரிசீலிக்கவில்லை எனவும் அந்த மணமகன் தெரிவித்துள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Oendrila Kapoor | MatchMaker and Dating Coach (@oendrila.kapoor)

லெஃப்ட், ரைட் வாங்கும் நெட்டிசன்கள்

ஒருதலைபட்சமாக யோசிக்கும் அந்த வாடிக்கையாளருக்கு சேவையை வழங்கமுடியாது என நிராகரித்த ஓண்ட்ரில்லா, அந்த நபர் தனக்கான துணையை தேடவில்லை என்றும், மனைவியின் கடந்த காலத்தின் மீதான கட்டுப்பாட்டையே நாடுவதாகவும் சாடியுள்ளார். இதுதொடர்பான பதிவு இணையத்தில் வைரலாக, அடையாளம் தெரியாத மாப்பிள்ளையை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  அந்த நபரின் எதிர்பார்ப்புகள் யதார்த்தமற்றவை மற்றும் பாலினப் பாகுபாடு கொண்டவை என்று விமர்சித்தனர். ஆண், பெண் சமம் என்பதை கல்வியால் கூட உணர்த்தமுடியவில்லை என சிலர் வேதனை தெரிவித்துள்ளனர். அதேநேரம் ஒரு சிலர், தனக்கான துணைவி எப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அவரது தனிப்பட்ட விருப்பங்களுக்கான உரிமை என சிலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி மெகா கணக்கு... 
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி கணக்கு... 

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
Embed widget