2 ரூபாய் டாக்டர்...எளிய விவசாயி...முன்னாள் காங்கிரஸ்காரர் : பிரதமர் மோடியின் அமைச்சரவை 2.0 விவரம்!
கர்நாடக மாநிலத்திலிருந்து ராஜீவ் சந்திரசேகர் , ஏ.நாராயணஸ்வாமி, ஷோபா கரண்ட்லாஜே, பகவந்த் கூபா ஆகிய 4 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசின் விரிவாக்கப்பட்ட அமைச்சரவையில் 43 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றார்கள். புதுடெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இதற்கான பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. மகாராஷ்டிராவின் நாராயண் தாட்டு ரானே முதலாவதாகப் பதவியேற்றார்.அசாமிலிருந்து 2 முறை எம்.பி.யாகத் தேர்வான சர்பானந்த சோனாவால் அமைச்சராகப் பதவியேற்றார். இவர் மத்திய அமைச்சரவையில் விளையாட்டுத் துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தவர். மத்தியபிரதேசத்திலிருந்து ஐந்து முறை மாநிலங்களவைக்குத் தேர்வான ஜோதிராத்திய சிந்தியா பாஜக அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்றார். 50 வயதான சிந்தியா முன்னாள் காங்கிரஸ் உறுப்பினராவார்.
#CabinetExpansion2021 | Munjapara Mahendrabhai, John Barla, L Murugan, Nisith Pramanik, take oath as ministers. pic.twitter.com/ZHXVipufSS
— ANI (@ANI) July 7, 2021
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பீகாரின் ராம் பிரசாத் சிங் மற்றும் ஒடிசாவின் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். மத்திய அமைச்சரவையில் விளையாட்டுத்துறை இணை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூ விரிவாக்கம் செய்யப்படும் புதிய அமைச்சரவையிலும் அமைச்சராகப் பதவியேற்றார்.
பாஜக அரசு முந்தைய அமைச்சரவையில் கப்பல் போக்குவரத்து இணை அமைச்சராக இருந்த மன்சுக் மாண்டவ்யா,வேளாண் துறை இணை அமைச்சராக இருந்த பர்ஷோத்தம் ரூபாலா மற்றும்
வீட்டு வசதித் துறை இணை அமைச்சராக இருந்த ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் இந்த விரிவாக்கப்பட்ட அமைச்சரவையில் பொறுப்பேற்றனர். பெரும்பாலானவர்கள் மூன்றுமுறைக்கு மேல் நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்,மத்திய அமைச்சரவையில் உள்துறை இணையமைச்சராக இருந்த கங்காபுரம் கிஷண் ரெட்டி விரிவாக்கப்பட்ட கேபினெட்டின் புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
#CabinetExpansion2021 | Bhagwanth Khuba, Kapil Moreshwar Patil and Pratima Bhoumik take oath as ministers. pic.twitter.com/2sVOWGT0Jf
— ANI (@ANI) July 7, 2021
நிதித்துறை இணையமைச்சராக இருந்த அனுராக் சிங் தாக்கூர் பிரதமர் மோடி கேபினேட்டின் புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றார். மத்திய அமைச்சரவையில் சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்த அனுபிரியா சிங் படேல் விரிவாக்கப்படும் மோடி அமைச்சரவையின் முதல் பெண் அமைச்சராகப் பதவியேற்றார். உத்தரப்பிரதேசத்திலிருந்து 2வது முறையாக எம்.பி.யானவர். உ.பி.யின் பானு பிரதாப் சிங் வர்மா அமைச்சராகப் பொறுப்பேற்றார்.அமைச்சராகப் பொறுப்பேற்ற பானு பிரதாப் சிங் வர்மா வழக்கறிஞர். உத்திரபிரதேச மாநில எம்.எல்.ஏ.வாகப் பதவி வகித்தவர்.அந்த மாநிலத்திலிருந்து 5 முறை எம்.பியாகத் தேர்வு செய்யப்பட்டவர். மத்திய அமைச்சரவையில் சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்த அனுபிரியா சிங் படேல் விரிவாக்கப்படும் மோடி அமைச்சரவையின் முதல் பெண் அமைச்சராகப் பதவியேற்றார்.
உத்தரப்பிரதேசத்திலிருந்து 2வது முறையாக எம்.பி.யானவர்.குஜராத் சமூக நலவாரிய உறுப்பினராக இருந்த தர்ஷனா ஜார்தோஷ் அமைச்சராகப் பதவியேற்றார். அந்த மாநிலத்திலிருந்து 3 முறை எம்.பி.யாகத் தேர்வானவர். உச்சநீதிமன்ற வழக்கறிஞர், சமூக சேவகர் மீனாட்சி லேகி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.புதுடெல்லி 2வது முறையாக எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். குஜராத் மாநிலத்திலிருந்து 2வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சவுஹான் தேவுசின் அமைச்சராகப் பொறுப்பேற்றார். இவர் அகில இந்திய வானொலியின் முன்னாள் பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.கர்நாடக மாநிலத்திலிருந்து ராஜீவ் சந்திரசேகர் , ஏ.நாராயணஸ்வாமி, ஷோபா கரண்ட்லாஜே, பகவந்த் கூபா ஆகிய 4 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.