முற் புதர்களை மூலிகைத் தோட்டமாக மாற்றிய பஞ்சாயத்து தலைவர் கவிதா முருகன்! குவியும் பாராட்டு
தருமபுரி அருகே ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில், பயனுள்ள மூலிகை, பசுமை தோட்டம் வைத்து, பராமரித்து வரும் ஊராட்சி தலைவர்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த தடங்கம் ஊராட்சியில் அவ்வை நகர், ஜீவா நகர், தடங்கம், இந்திரா நகர், கொத்தடிமை காலனி, நேரு நகர், அதியமான் நகர், கொட்டாவூர், மேட்டு கொட்டாய், சவுளுப்பட்டி, தாளப்பள்ளம், தோக்கம்பட்டி பெருமாள் கோயில் மேடு, சித்தேஸ்வரா நகர், சத்யா நகர், கக்கன்ஜிபுரம் காலனி உள்ளன. இந்த ஊராட்சி மன்ற தலைவராக கவிதா முருகன் பணியாற்றி வருகிறார்.
இந்த ஊராட்சியில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8 ஆயிரத்து 600 மக்கள் தொகை உள்ளன. தடங்கம் ஊராட்சியில் சிப்ஹாட்டிற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஊராட்சி மன்ற அலுவலகம் பணிகள் மும்முரமாக நடக்கிறது.
தடங்கம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முருகன் இயற்கை மீது கொண்ட ஆர்வத்தால் ஊராட்சி முழுவதும் மரக் கன்றுகளை அதிக அளவில் நன்று பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் தடங்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே புதர் மண்டி ருசிச் சந்துக்கள் ஏற்படுமாக இருந்த இடத்தினை தூய்மைப்படுத்தி அங்கு மக்களுக்கு பயனுள்ள வகையில் மூலிகை பசுமை தோட்டம் அமைக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த பசுமை தோட்டத்தில் பழச்செடிகள் மற்றும் மூலிகை செடிகள், வாட்டர் ஆப்பிள், மாதுளை, பச்சை அத்தி, மா, பலா, வாழை, கொய்யா, சீதா, சாத்துக்குடி, நாவல், நெல்லி, பபுல் பாஸ், எலுமிச்சை, செர்ரி பழம், சப்போட்டா, பதாம் உள்ளிட்ட பழச்செடிகளும், தென்னை, நொச்சி, பிரண்டை, கல்யாண முருங்கை, துளசி, கற்றாழை, வெற்றிலை, செம்பருத்தி, அரளி உள்ளிட்ட மூலிகை செடிகளும் வளர்க்கப்படுகிறது.
மேலும் நாம் இதுவரை கண்களால் மட்டுமே பார்த்து வந்த பிரியாணி இலை, லவங்க போன்ற மலைப் பிரதேசங்களில் வளரக்கூடிய அரிய வகை செடிகளையும் கேரளாவிலிருந்து வாங்கி வந்து எந்த இடத்தில் வளர்த்து வருகிறது. மேலும் சர்க்கரை நோயை குணப்படுத்துகின்ற வகையில் அரிய வகை மருத்துவமான சர்க்கரை ஆப்பிள் செடியும் இங்கு வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த ஆப்பிள் தொடர்ந்து 45 நாட்கள் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் முழுவதுமாக குணமடைந்து விடுகிறது.
இந்த சிறிய மூலிகை தோட்டத்தை பராமரிப்பதற்காக தனியாக ஆள் வைத்து, தினந்தோறும் அதனை பராமரித்து வருகின்றனர். அலுவலக நேரம் தவிர மற்ற அனைவரும் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முருகன் மூலிகை தோட்டத்திற்கு தண்ணீர் விடுவது, பராமரிப்பது போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்த பசுமை தோட்டத்தில் இருந்து குளிர்ந்த காற்று வீசுவதால், அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இருக்கையில் ஊராட்சி மன்ற அலுவலக ரீதியான வேலைக்கு வரும் பொதுமக்கள் அமர்ந்து இளைப்பாறிவிட்டு செல்கின்றனர்.
மேலும் மூலிகைத் தோட்டத்தில் உள்ள வாட்டர் ஆப்பிள், நெல்லிக்கனி, எலந்தை உள்ளிட்ட பழங்களை அருகில் உள்ள மக்கள் தினந்தோறும் பறித்து உண்டு மகிழ்ந்தனர். இந்த இடத்தில் மூலிகை தோட்டம் நன்றாக பராமரிக்கப்பட்டு வருவதால், வெயில் காலங்களில் கூட,இந்த இடத்தில் குளிர்ந்த சீதோசன நிலையே இருந்து வருகிறது. இதனால் கிராமத்தில் உள்ள மக்கள் அடிக்கடி இந்த இடத்தில் வந்து அமர்ந்து விட்டு செல்கின்றனர்.
மேலும் இந்த சிறிய மூலிகை தோட்டத்தில் அரிய வகை மூலிகைகள் இருப்பதால், இந்த மூலிகை செடிகளின் மகத்துவம் குறித்தும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் காட்டும் வகையில் இந்த ஊராட்சி மன்ற தலைவர் செயல்பாடு அமர்ந்திருப்பதால், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.