மேலும் அறிய

பயந்து பயந்து நடக்கிறோம்.. பாலம் கட்டித்தாங்க.. மலைவாழ் மக்கள் வேதனை

அரூர் பகுதியில் உள்ள மலை கிராமங்களில் தொடர் கனமழை பெய்து வருவதால் அரசநத்தம் கலசப்பாடி மலையில் காற்றாற்றில் வெள்ளப்பெருக்கு-ஜேசிபி இயந்திரம் மூலம் ஆற்றைக் கடந்த மலைவாழ் மக்கள்.

காட்டாற்று வெள்ளம் பணிக்கு சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் அவதி 

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட அரசநத்தம், கலசப்பாடி உள்ளிட்ட கிராமங்கள் வாச்சாத்தி அருகே உள்ள மலையில் அமைந்துள்ளது. இந்த மலை கிராமங்களுக்கு  அத்தியாவசிய தேவைக்காகவும், மருத்துவமனை, கல்லூரிகள் இங்கு இருந்து சுமார் 7 கி.மீ தூரம் மலை மீது செல்ல வேண்டும்.

 இந்த நிலையில் சித்தேரி மலை பகுதியில் 3 இடங்களில் காட்டாறு வருகிறது. இதில் மழைக் காலங்களில் எப்பொழுதுமே காற்றாற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்படும்‌. ஆனாலும் இந்த பகுதியில் உள்ள மக்கள் பெரியவர்கள் சிறியவர்கள் பெண்கள் என இந்த காற்றாற்றில் வருகின்ற வெள்ளத்தில் நடந்து சென்று தங்களது கிராமங்களுக்கு செல்கின்றனர். 

இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக அரூர், சித்தேரி கோட்டப்பட்டி உள்ளிட்ட மலை பகுதியில்  கிராமங்களில் தினமும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அரசநத்தம், கலசப்பாடி மலை மீது தொடர் மழை பெய்து வருவதால் காற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

ஜேசிபி எந்திரம் மூலம் ஆற்றைக் கடந்த மலைவாழ் மக்கள்

இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக மலையை விட்டு கீழே இறங்கியவர்கள் மலை மீது ஏற முடியாமல் அவதிக்குள்ளாகினர். இதனால் ஜேசிபி இயந்திரம் வரவழைத்து இருசக்கர வாகனங்கள் மற்றும் மலைவாழ் மக்களை ஆற்றைக் கடந்து தங்களது வீடுகளுக்கு சென்றனர்.

 அதேபோல் மலை மீது இருந்து கீழே இறங்கியவர்களும் காற்றாற்று வெள்ளத்தில் ஆற்றைக் கடக்கும் முடியாமல் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் இறங்கி சென்றனர். 

ஆனாலும் ஒருசிலர் காற்றாற்று வெள்ளத்தை பொருட்படுத்தாமல், ஆபத்தான முறையில் வெள்ளத்தை கடந்து சென்றனர். மேலும் அடிக்கடி மழைக் காலங்களில் இது போன்ற வெள்ளப் பெருக்கு ஏற்படுவதால், மலை கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு ஊரை விட்டு வெளியே செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். 

இதுகுறித்து அலசநத்தம் கலசப்பாடி மலை கிராம மக்கள் கூறியதாவது:-

ஒவ்வொரு முறையும் மழைக்காலங்களில் இது போன்றவை சிரமகத்துக்கு உள்ளாகி வருகிறோம் பலமுறை மனு கொடுத்துள்ளோம் ஆனால் இதுவரை இந்த பாலத்திற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை குழந்தைகள் ஆண்கள் பெண்கள் என எல்லா அத்தியாவசிய தேவைக்காகவும் நாங்கள் அருவருக்கும் தர்மபுரிக்கும் செல்ல வேண்டி இருக்கு காலையில் பணிக்கு சென்றால் மாலை மழை வந்த உடனேயே இந்த இடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடுகிறது அதனால் பணிக்கு சென்று வருபவர்கள் திரும்பி வீட்டுக்கு செல்லும்போது காட்டாற்றில் வெள்ளம் வருவதால் தவித்து வருகிறோம் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் இன்னும் நடவடிக்கை எடுக்காததால் இதுபோன்ற சிரமத்தை நாங்கள் மேற்கொள்கிறோம் உடனடியாக இந்த காட்டாற்று வெள்ளத்தில் இருந்து எங்களை காப்பாற்றிய பாலம் அமைத்துக் கொடுத்தால் எங்கள் வாழ்வாதாரத்துக்காக நாங்கள் வெளியில் சென்று வீட்டுக்கு திரும்ப வசதியாக இருக்கும் என்று ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்

எனவே இந்த பகுதியில் பாலம் அமைத்துக் கொடுத்தால் இந்த மலைவாழ்மக்களுக்கு வசதியாக இருக்கும் என வலியுறுத்துகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thirumavalavan: “ஆட்சியில் பங்கு , அதிகாரத்தில் பங்கு” - முதல்வரை சந்தித்த திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
“ஆட்சியில் பங்கு , அதிகாரத்தில் பங்கு” - முதல்வரை சந்தித்த திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
Siddharth - Aditirao Marriage: டும் டும் டும்! அதிதி ராவ் ஹைதாரியை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.. குவியும் வாழ்த்துக்கள்
டும் டும் டும்! அதிதி ராவ் ஹைதாரியை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.. குவியும் வாழ்த்துக்கள்
Ranipet Jaguar Mega: ராணிப்பேட்டையில் ஜாகுவார் கார், மெகா காலணி உற்பத்தி ஆலை - 25,000 பேருக்கு வேலை - முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
Ranipet Jaguar Mega: ராணிப்பேட்டையில் ஜாகுவார் கார், மெகா காலணி உற்பத்தி ஆலை - 25,000 பேருக்கு வேலை - முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
Watch Video: பிரியங்காவுக்கு பல்பு கொடுத்த பிரபல நடிகை நிகிலா! என்னப்பா நடந்துச்சு?
Watch Video: பிரியங்காவுக்கு பல்பு கொடுத்த பிரபல நடிகை நிகிலா! என்னப்பா நடந்துச்சு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SP Varun kumar Anna Award : அரசின் அண்ணா பதக்கம்! அடித்து ஆடும் வருண்குமார்! Thirumavalavan meets MK Stalin : ஸ்டாலின் திருமா மீட்டிங்! முடிவுக்கு வருமா சர்ச்சை? பின்னணி என்ன?Nitin Gadkari on Congress : ’’எனக்கு பிரதமர் பதவி’’எதிர்க்கட்சி பக்கா ஸ்கெட்ச்! போட்டுடைத்த  கட்காரிMK Stalin Phone Call |’’தைரியமா இருங்க’’PHONE-ல் பேசிய முதல்வர்! உத்தரகாண்ட் நிலச்சரிவு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: “ஆட்சியில் பங்கு , அதிகாரத்தில் பங்கு” - முதல்வரை சந்தித்த திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
“ஆட்சியில் பங்கு , அதிகாரத்தில் பங்கு” - முதல்வரை சந்தித்த திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
Siddharth - Aditirao Marriage: டும் டும் டும்! அதிதி ராவ் ஹைதாரியை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.. குவியும் வாழ்த்துக்கள்
டும் டும் டும்! அதிதி ராவ் ஹைதாரியை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.. குவியும் வாழ்த்துக்கள்
Ranipet Jaguar Mega: ராணிப்பேட்டையில் ஜாகுவார் கார், மெகா காலணி உற்பத்தி ஆலை - 25,000 பேருக்கு வேலை - முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
Ranipet Jaguar Mega: ராணிப்பேட்டையில் ஜாகுவார் கார், மெகா காலணி உற்பத்தி ஆலை - 25,000 பேருக்கு வேலை - முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
Watch Video: பிரியங்காவுக்கு பல்பு கொடுத்த பிரபல நடிகை நிகிலா! என்னப்பா நடந்துச்சு?
Watch Video: பிரியங்காவுக்கு பல்பு கொடுத்த பிரபல நடிகை நிகிலா! என்னப்பா நடந்துச்சு?
Breaking News LIVE: கும்மிடிப்பூண்டி தடைகளை உடைத்து பட்டியலின மக்கள் ஆலய பிரவேசம்..
Breaking News LIVE: கும்மிடிப்பூண்டி தடைகளை உடைத்து பட்டியலின மக்கள் ஆலய பிரவேசம்..
பெண்கள் சுய தொழில் தொடங்க ரூ.50 ஆயிரம் அரசு மானியம்; பெறுவது எப்படி? தகுதி என்ன?
பெண்கள் சுய தொழில் தொடங்க ரூ.50 ஆயிரம் அரசு மானியம்; பெறுவது எப்படி? தகுதி என்ன?
"என் தாரா.. என் தாரா" விருது வென்ற நயன்தாரா! அன்பு முத்தமிட்ட விக்னேஷ்சிவன்!
TNPSC Group 2 Answer Key: குரூப் 2, 2ஏ தேர்வு ஆன்சர் கீ எப்போது வெளியீடு? டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு
TNPSC Group 2 Answer Key: குரூப் 2, 2ஏ தேர்வு ஆன்சர் கீ எப்போது வெளியீடு? டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு
Embed widget