Hogenakkal: புது பொலிவுடன் ஒகேனக்கல்... சுற்றுலாப் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்..!
ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. அதனை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் விரைவில் திறந்து வைக்கிறார்.
தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று ஒகேனக்கல். இந்த சுற்றுலா தலத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
3 ஆண்டில் 60 லட்சம் பேர் வருகை வந்துள்ளனர்
கடந்த மூன்று ஆண்டில் 60 லட்சம் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலுக்கு வந்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 24 லட்சத்து 34,000 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதன் மூலம் 6.48 கோடி அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. தற்போது காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி கரையில் இருந்து மெயின் அருவி, சினி அருவி, நீரை கரையில் நின்று கண்டு கழிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பரிசல் துறை நவீன முறையில் அழகுபடுத்தி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து குவியும் சுற்றுலா பயணிகள்
தமிழகம் மற்றும் இன்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் தினசரி வந்து செல்கின்றனர். கோடை காலங்களிலும் விடுமுறை நாட்களிலும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிவது வாடிக்கையாக உள்ளது.
ஒகேனக்கலில் மெயின் அருவி மணல்மேடு, கூட்டாறு, சினி ஃபால்ஸ் நீர்வீழ்ச்சி முதல் முதலைப் பண்ணை, வண்ண மீன்கள் அருங்காட்சியகம், தொங்கும் பாலம் மற்றும் ஆலம்பாடி பரிசல் துறை ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்த்து செல்கின்றனர்.
மெயின் அருவி மற்றும் சினி ஃபால்ஸில் விரும்பி குளிக்கின்றனர். பரிசல் ஓட்டிகள் சுற்றுலாப் பயணிகளை அருவிகளுக்கு அருகே அழைத்துச் செல்வார்கள். தற்போது காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகத்தால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை விதித்துள்ளது.
நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.
ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். இதனை ஏற்று தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சுற்றுலாத்துறை இணைந்து ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை மேம்படுத்த 18 கோடி வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பணிகளை தொடங்கி வைத்தார். தற்போது 99 சதவீத மேம்பாட்டு பணிகள் முடிந்து விரைவில் திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்
ஒகேனக்கல் சுற்றுலா தளம் உலக சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட புதிய சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகளுக்காக 18 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் கடந்த ஒன்றரை வருடமாக நடந்து வருகிறது. ஒகேனக்கல் நோக்கி வரும் காவிரி நீர் ஐந்தருவியில் விழும் காட்சியை கண்டு ரசிக்க வாட்ச் டவர் அமைக்கப்படுகிறது.
வாட்ச் டவர் மூலம் அருவிகளை கண்டு ரசிக்கலாம்
மெயின் அருவி சினி பால்ஸுக்கு செல்லும் நீரை கரையில் நின்று கண்டு கழிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பரிசல் துறை நவீன முறையில் அழகு படுத்தி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நவீன கழிப்பறை வசதி அனைத்து வசதிகளுடன் கூடிய மீன் சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
மசாஜ் செய்யும் தொழிலாளர்களுக்கு புதிய கட்டிடம்
மசாஜ் செய்ய தனி இடம், பெண்கள் ஆடை மாற்ற பாதுகாப்புடன் கூடிய தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 99 சதவீதத்திற்கு மேல் பணிகள் முடிவடைந்துள்ளது. விரைவில் தமிழக முதல்வர் காணொளி மூலம் திறந்து வைப்பார் என்று அதிகாரிகள் கூறினர்.