மேலும் அறிய

Cauvery river: குறைந்த மழை... காவிரி ஆற்றில் நீர்வரத்து 1500 கன அடியாக சரிவு

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 3000 கன அடியிலிருந்து 1500 கன அடியாக குறைந்தது.

பருவ மழை பொய்த்து போனதாலும், கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால், காவிரி ஆற்றில் கடந்த நான்கு மாதங்களாக நீர்வரத்து வினாடிக்கு 200 கன அடியாக இருந்து வந்தது. இந்த நிலையில் காவிரி ஆறு வரண்டு பாறைகளாகவும் காட்சியளித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, தேன்கணிகோட்டை, தளி உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இந்நிலையில் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 200 கன அடியில் இருந்து 1500 கன அடி வரை உயர்ந்தது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் சுற்றுலாப் பயணிகளும், ஒகேனக்கல் சுற்றுலாவை நம்பியுள்ள தொழிலாளர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், கடந்த சில தினங்களுக்கு முன் கோடை மழை குறைந்தது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் குறைந்து, வினாடிக்கு 1000 கன அடியாக சரிந்தது. இதனையடுத்து இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் காவிரி ஆற்றில் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது. இதனால் நேற்று காலை மீண்டும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 1000 கன அடியிலிருந்து வினாடிக்கு 3000 கன அடியாக உயர்ந்து வந்தது. தொடர்ந்து நேற்று காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து, இன்று நிலவரப்படி தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 3000 கன அடியிலிருந்து சரிந்து, வினாக்கு 1500 கன அடியாக குறைந்துள்ளது.

மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை விட்டுவிட்டு கோடை மழை பெய்து வருவதால்,  காவிரி ஆற்றில் நீர்வரத்து  மாறி, மாறி குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. நேற்று தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வந்த நிலையில், காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிமவில்லை. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. மேலும் ஐந்து நாட்களுக்கு கனமழை பொழிய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் காவிரி நீர் பிடித்து பயன்களில் கனமழை பெய்தால், காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து சீராக இருப்பதால், ஒகேனக்கல் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (20-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
தருமபுரியில் நாளை (20-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (19-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
தருமபுரியில் நாளை (19-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (18-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (18-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (13-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
தருமபுரியில் நாளை (13-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget